tamilnadu

img

இந்தியா அனைத்து மக்களுக்குமானது! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியா எந்த ஒரு தனிப்பட்ட கலாசாரம், கொள்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல; அனைத்து மக்களுக்குமானது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"இந்தியா எந்த ஒரு தனிப்பட்ட கலாசாரம், கொள்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அனைத்து மக்களுக்குமானது.
பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை சுருக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் உறுதியாக எதிர்ப்பது என இந்த அரசமைப்பு தினத்தில் மீண்டும் உறுதி ஏற்போம்.
அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அனைத்து நடவடிக்கைகளையும் செய்வோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.