இந்தியாவின் வான் பரப்பை சூழ்ந்த எத்தியோப்பியா எரிமலை சாம்பல்!
எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஹேலி குப்பி எரிமலை 12,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்திருக்கும் நிலையில், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை சூழ்ந்துள்ளது. இந்த சாம்பல் மேகக் கூட்டங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு, சிறிய கண்ணாடித் துகள்கள், பாறைகளின் துகள்கள் கலந்துள்ளது. மேலும், மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் 15,000 முதல் 45,000 அடி உயரத்தில் நகர்ந்து வருவதால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் தில்லி வான் பரப்புகளில் சாம்பல் மேகக் கூட்டங்கள் சூழ்ந்துள்ள நிலையில், விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், விமான என்ஜின்களை பாதிக்கக்கூடிய துகள்கள் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
