states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பீகாரில் உள்ள பெண்களின் தாய்ப்பாலில், அணு குண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் இருப்பதாக மருத்துவர்கள் அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போஜ்பூர், சமஸ்தி பூர், ககாரியா, நாளந்தா உள்ளிட்ட மாவட்டங்  களை சேர்ந்த தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள் ளது. நிலத்தடிநீர் மாசு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தாய்ப்பாலில் யுரேனியம் இருப்ப தற்கு காரணம் என இதற்கு விளக்கம் அளிக்கப்  பட்டுள்ளது. மேலும், இத்தகைய தொடர்ந்து  பாதிப்பு ஏற்பட்டால், சுமார் 70% குழந்தைகளுக்கு  உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ள தாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பின் பீகார் சட்டமன்றம் டிசம்பர்  1ஆம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர்  5 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகி யுள்ளது. இந்த கூட்டத்தொடரில் எம்எல்ஏக் களுக்கு தற்காலிக சபாநாயகர் (அவர் யார் என்று தெரியவில்லை) பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

தில்லி நகரம் காற்று மாசால் கடும் இன்னலைச் சந்தித்து வரும் நிலையில், செவ்வாயன்று அயோத்தி கோவில் கோபுர உச்சியில் 30 அடி உயர கொடிமரத்தில் காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார்.