இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை வாசிப்பு! தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது
சென்னை, நவ. 25 - இந்திய அரசியலமைப்புச் சட்டம், நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதன் 76-ஆம் ஆண்டினையொட்டி, ‘நவம்பர் 26’ அன்று காலை 11 மணிக்கு அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி களில் அரசியலமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். அதன்படி, தலை மைச்செயலகம், உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரி கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புதன்கிழமையன்று இந்த நிகழ்ச்சி நடைபெறும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசிய லமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு கள் மற்றும் நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றி சமூகநீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித் துள்ளார்.
