தொழிலாளர் விரோதச் சட்டங்களுக்கு எதிர்ப்பு இன்று தொழிற்சங்கங்கள் நாடு தழுவியப் போராட்டம்!
சென்னை, நவ. 25 - ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்தும், அவற்றைத் திரும்பப் பெறக்கோரியும், புதன்கிழமை (நவ.26) அன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக் கட்டி யுள்ளது. புதிதாக நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை (Four Labour Codes) கொண்டு வந்துள்ளது. 12 மணி நேரம் வரை தொழிலாளி யிடம் வேலை வாங்கலாம்; உரிமமே இல்லாமல், தொழிலாளியின் சம்மத மின்றி 3 மாதத்திற்கு 125 மணி நேரம் வரை ஓவர் டைம் வேலை வாங்கலாம்; சட்ட சலுகைகள் இல்லாமல் 50 பேர்களைக் கூட ஒப்பந்தத் தொழி லாளர்களாக வைத்திருக்கலாம்; ரூ. 18 ஆயிரம் சம்பளம் பெறுபவர்கள் தொழி லாளர்களாக கருதப்பட மாட்டார்கள்; அவர்களுக்கு அடிப்படைச் சம்ப ளத்தை அரசு நிர்ணயிக்க வேண்டியது கட்டாயமல்ல; 40 தொழிலாளர்களுக்கு குறைவாக பணியாற்றும் நிறுவனங்கள் இனி தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வராது; நிறுவனம் நடத்துவோர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 12 சதவிகிதத்திற்குப் பதில் இனி 10 சதவிகிதம் பங்களிப்பு செலுத்தி னால் போதுமானது; தொழிற்சாலை களை ஆய்வுசெய்ய அரசு அனுமதி இல்லாமல் அதிகாரிகள் செல்லக் கூடாது என்று சட்ட விதி களைத் திருத்தியுள்ளது. எனவே, இவற்றைக் கண்டித்து எல்பிஎப், எச்எம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, டியுசிசி, டபிள்யுபிடியுசி, எம்எல்எப், எல்டியுசி, எல்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்ட மைப்பான சம்யுக்த கிஷான் மோர்ச்சா (எஸ்கேஎம்) ஆகியவை ஆர்ப்பாட்டங் களை நடத்துகின்றன.