tamilnadu

img

ஜன. 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஜன. 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் 

ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு சென்னை, நவ. 25 - 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2026 ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாக ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வேண்டும், சிறப்புக்காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர் இயக்கம் நடத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி நவம்பர் 18 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்நிலையில் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் செவ்வாயன்று (நவ.25) சென்னையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் மு. பாஸ்கரன், சே. பிரபாகரன், இலா. தியோடர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களி டம் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரபாகரன், “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலி யுறுத்தி வட்டார அளவில் பிரச்சார இயக்கம்,  டிசம்பர் 13 அன்று மாவட்ட தலைநகரங் களில் உரிமை மீட்பு உண்ணாநிலை போராட்டம்; டிசம்பர் 27 அன்று மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடும், அதனை தொடர்ந்து ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தமும் நடைபெறும்” என்றார்.  மேலும் அவர் கூறுகையில், ‘23 ஆண்டுகளாக ஊழியர்களிடம் 10 சதவிகி தம் பிடித்தம் செய்துவிட்டு ஓய்வூதியம் வழங்க மறுப்பதை எப்படி ஏற்க முடியும். புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி பிடித்தம் செய்த 42 ஆயிரம் கோடி ரூபாயை எல்ஐசி-யில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் வட்டியை கொண்டு ஓய்வூதியம் வழங்க முடியும்” என்றார்.