கிலோ 1 ரூபாய் பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் “வெங்காயத்திற்கு இறுதி ஊர்வலப் போராட்டம்”
ஒன்றிய, மாநில பாஜக அரசை கண்டித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் முழக்கம்
போபால் நாட்டின் முக்கிய வெங்காய உற்பத்தி பகுதிகளில் ஒன்றான மால்வா-நிமர் பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. மகாராஷ் டிரா மாநிலம் நாசிக் போன்று, இப் பகுதியிலும் பெரிய வெங்காயச் சந்தை, மண்டிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மத்தியப்பிர தேச மாநிலத்தின் மண்டோசோர் மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை வீழ்ச்சியைக் கண்டித்து, விவசாயிகள் “வெங்காய இறுதி ஊர்வலப் போராட்டம்” நடத்தினர். வெங்காயத்திற்கு மாலை அணி வித்து, மேளதாளங்களுடன் நடை பெற்ற இந்த “வெங்காய இறுதி ஊர்வலத்தில்” நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று, ஒன்றிய, மாநில பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்ற வெங்காய விவசாயி பத்ரி லால் தாக்கட் கூறுகையில்,”சந்தை மற் றும் மண்டிகளில் வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ.1 முதல் ரூ.10 வரை கொடுக்கப்படுகிறது. குறிப்பாக சில இடங்களில் கிலோவுக்கு ரூ.1 முதல் ரூ. 2 வரையிலான மிகக் குறைவான விலைக்கு வாங்கப்படு கிறது. அதே நேரத்தில் உற்பத்திச் செலவு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ. 12 ஆக உள்ளது. இதனால் விவ சாயி பெரும் நஷ்டத்தில் உள்ளனர். நியாயமான விலை கிடைக்காததா லும், ஒன்றிய, மாநில பாஜக அரசு கள் கண்டுகொள்ளாததாலும் வெங்காய இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறு மோசமாக உள்ள சூழ லில், அரசாங்கம் இந்த விஷயத்தில் விழித்துக் கொள்ளவில்லை என் றால், நாங்கள் என்ன செய்ய முடி யும்? லாபம் கிடைக்கவில்லை என் றால் பரவாயில்லை. ஆனால் உற் பத்திச் செலவுகளை கூட மீட்டெ டுக்க முடியாவிட்டால் விவசாயி களின் நிலைமை என்ன என்பதை ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசு கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார். தேவி லால் விஸ்வகர்மா என்ற விவசாயி கூறுகையில், “வெங்கா யம் எங்களுக்குக் குழந்தைகள் போன்றது. எங்கள் குடும்பத்தில் ஒரு பகுதி. இரண்டாவது பயிர் அதிக மழையால் நாசமானது. இப்போது விலை போகாமல் வெங்காயங்கள் காய்ந்து விட்டன. எங்கள் செலவு களை ஈடுகட்டும் விலையை அர சாங்கம் வழங்கவில்லை. அதனால் நாங்கள் அவற்றின் இறுதிச் சடங்கு களைச் செய்து போராட்டம் நடத்தி னோம்” என அவர் குற்றம்சாட்டி னார். விவசாயிகள் எச்சரிக்கை இந்தப் போராட்டம் இறுதிச் சடங்கோடு முடிவடையவில்லை. அரசு நிவாரணம் வழங்கும் மற்றும் 25% ஏற்றுமதி வரியை நீக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். ஒன்றிய மற்றும் மாநில அரசு கள் கண்டுகொள்ளவில்லை என் றால், மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என மத்தியப்பிரதேச விவசாயிகள் எச்சரிக்கை விடுத் துள்ளனர்.
ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி
ஒன்றிய வேளாண்துறை அமைச்சராக இருப்பவர் சிவராஜ் சிங் சவுகான். மத்தி யப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல மைச்சர் (பாஜக) ஆவார். இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதுதொடர்பாக விவ சாயிகள் கூறுகையில்,”வெங்காயத்தின் மீதான நீண்டகால 25% ஏற்றுமதி வரி, இந்திய வெங்கா யத்தை வெளிநாடுகளில் போட்டியிட முடியாததாக மாற்றியுள்ளது. இதன் விளைவாக, ஏற்றுமதி கடுமையாகச் சரிந்துள்ளது. குறிப்பாக நாட்டில் வெங்காய இருப்பு அதிகரித்துள்ளது. மண்டியில் கூட விலைகள் சரிந்துள்ளன. மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல மைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தற்போது ஒன்றிய வேளாண் அமைச்ச ராக இருந்தாலும், பலமுறை முறையீடு செய்த போதிலும், ஒன்றிய அரசு ஏற்றுமதி வரியைக் குறைக்கவில்லை” என்ற குற்றச்சாட்டு களுடன் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக விவசாயிகள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.