எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை, சுமார் 4,000 கி.மீ. தூரம் நகர்ந்து வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது.
எத்தியோப்பியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுமார் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக ஹெய்லி குப்பி எரிமலை, கடந்த நவ.23ஆம் தேதி அன்று வெடித்தது. இதனால் வானில் சுமார் 14 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பலும், மேகங்களில் புகையும் சூழ்ந்தது. ஏமன், ஓமன், இந்தியா மற்றும் வடக்கு பாகிஸ்தான் பகுதியை சாம்பல் சூழ் மேகங்கள் சூழ்ந்துள்ளது. இதை தொடர்ந்து, தில்லி, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஆகிய பகுதிகளில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு பாதையை விமான நிறுவனங்கள் தவிர்க்குமாறு டிஜிசிஏ மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளன.
