அனல் காற்று வீசட்டும்
ஐந்தாண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப் பட்ட நான்கு தொகுப்புச் சட்டங்கள் நடை முறைக்கு வந்துள்ளதாக அடாவடியாக அறி வித்துள்ளது ஒன்றிய அரசு. தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த சட்டங்கள் கார்ப்பரேட் முதலாளிகளின் அழுத்தம் காரணமாக உடனடி அமலுக்கு வந்துள் ளது. இதை எதிர்த்து நாடு தழுவிய கிளர்ச்சிப் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
அனைத்து வகையிலும் தொழிலாளர் களுக்கு எதிரான இந்த தொகுப்புச் சட்டங் களை நடைமுறைப்படுத்திய கையோடு எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களுக்கு எதிரான மேலும் பல சட்டங்களை கொண்டுவரத் துணிந்துள்ளது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு.
டிசம்பர் 1 அன்று துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 முக்கியமான சட்டமுன்வரைவுகளை நிறைவேற்ற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. அதில் ஒன்று தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரை அடிப்படையில் உயர் கல்விக்கு ஒரே ஆணையம் அமைப்பதற்கான மசோதா. இதன்படி யுஜிசி, ஏஐடிசிஇ, என்சி டிஇ உள்ளிட்ட வாரியங்கள் கலைக்கப்பட்டு உயர்கல்விக்கு ஒரே வாரியம் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 12 உறுப்பி னர்கள் இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறையை மத்திய மயம், வணிக மயம், காவிமயம் என்ற மும்மயக்கத்திற்குள் ஆழ்த்துவதே ஒன்றிய ஆட்சியாளர்களின் திட்டம். இத்தகைய உயர்கல்வி வாரியங்களை ஆர்எஸ்எஸ் மற்றும் கார்ப்பரேட் முதலாளி களின் அவயமாக்க துடிக்கிறது மோடி அரசு. இது தடுக்கப்பட வேண்டும்.
காப்பீட்டுத்துறையை முற்றிலும் தனியார்மய மாக்குவதற்கான மசோதாவும் கொண்டு வரப்பட இருக்கிறது. இது காப்பீட்டுத்துறையை மேலும் அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காவுகொடுக்கவே இட்டுச் செல்லும். பயனாளர்களின் நலனை முற்றிலும் வர்த்தகச் சூதாடிகளின் கைகளில் கொடுக்கும் விபரீதத் திட்டம் இது. காப்பீட்டுத் துறையை பாதுகாப்பது இந்திய மக்களின் எதிர்காலத்தோடு தொடர்புடையது.
எஸ்ஐஆர் என்கிற பெயரில் இந்தியா வின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிக்கற் களையே பெயர்க்க முயலும் மோடி அரசு இன்னும் ஒரு தாக்குதலாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சட்டத்தையும் கொண்டுவரத் துடிக்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட குழு வின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. நாடாளு மன்றத்தின் அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக எண்ணம் கொண்ட கட்சிகளும் இணைந்து செயல்பட்டு மோடி அரசின் திட்டங்களை முறி யடிக்க வேண்டும். குளிர்காலக் கூட்டத்தொட ரில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு எனும் அனல்காற்று வீசட்டும்.
