tamilnadu

img

கோபி அரசு மருத்துவமனையில் போதிய பணியாளர்களை நியமிக்க மக்கள் கோரிக்கை

கோபி அரசு மருத்துவமனையில் போதிய  பணியாளர்களை நியமிக்க மக்கள் கோரிக்கை

கோபி, நவ.21- கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணி யாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அரசு மருத்துவமனைக்கு நாள் தோறும் சிகிச்சைக்காக வரும் புறநோயாளிகள், தீவிர  காய்ச்சல் மற்றும் விபத்து எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைக் காக உள்நோயாளிகளில் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கர்ப்பிணிக ளுக்கான பரிசோதனை, மகப்பேறு மருத்துவத்தில் அறுவை  சிகிச்சை, குழந்தைகள் பிரிவு என சிகிச்சைக்காக நாள்தோ றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அனைத்து தரப்பு நோயாளிகளின் வசதிக்காக 200க்கும் மேற் பட்ட படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. 20க்கும்  மேற்பட்ட மருத்துவர்கள், 40க்கும் மேற்பட்ட செவிலியர் கள் சூழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். தற்போது  பருவநிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் மற்றும் இதர சிகிச் சைக்காக பொதுமக்கள் அதிகளவில் மருத்துவமனைக்கு  வந்து செல்கின்றனர். ஆனால், போதிய மருத்துவப் பணியா ளர்கள் இல்லாததால் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதில் சிக் கல் ஏற்பட்டுள்ளது. மேலும், போதியளவில் தூய்மைப் பணி யாளர்களும் இல்லாததால், சுகாதாரப் பணிகளை முறையாக  மேற்கொள்ள முடியாமல், நோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனையின் தலைமை மருத்து வரிடம் கேட்டபோது, அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் நிய மிப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்ப பட்டுள்ளதாக தெரிவித்தார். பருவநிலை மாற்றத்தால் நாள் தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவ மனைக்கு, மருத்துவப் பணியாளர்களையும், தூய்மைப் பணி யாளர்களையும் உடனே நியமித்து, மருத்துவமனை வளா கத்தை சுகாதாரமாக பேணி காக்க வேண்டும் என்பதே பொது மக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.