tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: அணை பூங்காவை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்த சுற்றுலாத்துறை

தீக்கதிர் செய்தி எதிரொலி: அணை பூங்காவை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்த சுற்றுலாத்துறை

உடுமலை, நவ.23- தீக்கதிர் செய்தியின் எதிரொலியாக, அம ராவதி அணை பூங்காவை சுத்தம் செய்யும்  பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கேட் பாற்று கிடக்கும் சுற்றுலாத் தலங்களை பெய ருக்கு ஆய்வு செய்து, அறிக்கையாக தரும்  மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவித்குமார் என்றும், அமராவதி மற்றும் திருமூர்த்தி அணையில் இருக்கும் பூங்காவை சுத்தம்  செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என நவ.13 ஆம் தேதியன்று தீக்க திர் நாளிதழில் செய்தி வெளியானது. இந் நிலையில், சனியன்று மாவட்ட சுற்றுலாத் துறை மற்றும் சுற்றுசூழல் அமைப்பின் சார் பில் அமராவதி அணை பூங்காவை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல ஆண்டு களுக்கு முன்பு சிறப்பாக செயல்பட்ட பூங்கா  தற்பொழுது மேய்ச்சல் நிலம் போல உள் ளதை சரி செய்து சிறப்பாக பராமரிக்க வேண் டும். தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து  செல்லும் முக்கிய சுற்றுலாத் தலம் என்ப தால், பெயருக்கு சுத்தம் செய்தால் மட்டும் போதாதது; பூங்காவில் இருக்கும் செடிகள் மற்றும் சிலைகளை புதுப்பிக்க வேண்டும். தண்ணீர் ஊற்று, மின் விளக்குகளை சரி  செய்து நல்ல முறையில் பூங்கா செயல்பட நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். மேலும், மாவட்ட சுற்றுலாத்துறை எப்படி யோ செயல்பட துவங்கியுள்ளது. நல்ல  துவக்கம் என்றாலும், திருமூர்த்தி அணை  பூங்கா, சின்னார் சாலை மற்றும் பொன்னி காட்டுத்துறை தடுப்பணை உள்ளிட்ட முக்கிய  சுற்றுலாத் தலங்களையும் மேம்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவ ரின் கோரிக்கையாக உள்ளது.