அடிமைத்தன சட்டத்தொகுப்பு அமலாக்கம்: சிஐடியு ஆர்ப்பாட்டம்
தருமபுரி, நவ.23- ஒன்றிய மோடி அரசு, தொழிலாள ருக்கு விரோதமாக திருத்தப்பட்ட நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சிஐ டியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை ஒன்றிய மோடி அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியு றுத்தி சனியன்று இந்திய தொழிற்சங்க மையத்தினர் சனியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலை வர் சி.கலாவதி தலைமை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் சி.நாக ராசன், மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், ஆறுமுகம், அங்கம்மாள், கவிதா, ஏ. சேகர், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, திருப்பூர் மாவட் டம், பல்லகவுண் டன்பாளையத்தில் இயங்கி வரும் சக்தி ஆட்டோ காம்போனென்ட் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு இன்ஜினியரிங் சங்க துணைச்செயலா ளர் ஆர்.சிவராஜ் தலைமை வகித் தார். இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜெ.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.கண்ணையன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் கே.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், இன்ஜினிய ரிங் சங்க பொருளாளர் எஸ்.கே.சந்திர மூர்த்தி நன்றி கூறினார்.
