மனித உரிமை மீறலில் ஈடுபடும் தனியார் பள்ளி நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
நாமககல், நவ.23- மனித உரிமை மீறலில் ஈடுபடும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், முள்ளுக்குறிச்சி அருகே உள்ள சம்பாபாலிபுதூரில் செயல் பட்டு வரும் சாமி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல் வேறு மாவட்டங்களில் இருந்து விடுதியில் தங்கியும், தினசரி வீடுக ளுக்கு சென்று வந்தும் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலை யில், பள்ளி நிர்வாகம் தனது பள்ளி முதலிடம் பிடிக்க வேண்டும், அதன் மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்தி கூடுதல் லாபம் ஈட்ட வேண் டும் என்ற லாப வெறிக்காக மாண வர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கல்வி என்ற பெயரில் தொடர் தாக்குதல்கள் நடைபெறுவ தாக அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்து வந்தது. விடுதி மாணவர் களை இரவில் தூங்கவிடாமல், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தலில் ஈடுபட்டதால் பல மாணவர்கள் விடுதியில் இருந்து தப்பி செல்வதாகவும் புகார் எழுந் துள்ளது. இச்சூழலில் கடந்த நவ.9 தேதியன்று அப்பள்ளியில் பயின்று வந்த மாணவர் ஒருவரை பள்ளியின் தாளாளரின் மகன் கொடூரமாக தாக் கியதில், ரத்த காயங்கள் ஏற்பட்டுள் ளது. இப்பிரச்சனைக்கு நியாயம் கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட அப்பள்ளியின் மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளியின் தாளாளர் கடுமையான வார்த்தைக ளில் பேசியதோடு பள்ளி மாற்றுச் சான்றிதழை கொடுத்து விடுவோம் என்று மிரட்டியதாகக் கூறப்படுகி றது. இந்நிலையில், தனியார் பள்ளி யில் மாணவர்களின் மீது நடத்தப்ப டும் கொடூர தாக்குதல்களை கண் டித்தும், மாணவர்களின் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் பள்ளி நிர்வாகிகள் மீது பள்ளி கல்வித்துறை மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். குழந்தைகள் மீது தொடர் தாக் குதல் நடைபெறுவதை தடுப்ப தற்கு மாநில மனித உரிமை ஆணை யமும், குழந்தைகள் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமகிரிப் பேட்டை ஒன்றியக்குழு சார்பில் ஞாயிறன்று முள்ளுக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எ. பழனிச்சாமி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே. சின்னசாமி, ஆர்.ரஜினி, ஆர்.செந் தில்குமார், பி.செந்தில், மணிகண் டன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில முன் னாள் தலைவருமான ஏ.டி.கண் ணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.பி.சபாபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இப்பிரச்சனையில் கல்வித் துறை காவல்துறை அதிகாரிகள் சமாதானம் பேசி பிரச்சனையை முடித்து வைத்ததாக கூறப்படு கிறது. ஆனால் இப்பள்ளியில் இந் தாண்டு மட்டும் ஐந்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் மீது கொடூர மாக தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள் ளதாக கூறப்படுகிறது.
