கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் குற்றச்சாட்டு
ஈரோடு, நவ.23- வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்டும், கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என பால் நுகர் வோர் கூட்டுறவு சங்கம் குற்றஞ்சாட்டி யுள்ளது. ஈரோடு பால் நுகர்வோர் கூட்டு றவு சங்க ஓய்வூதியர் சங்க அமைப் புக்கூட்டம் ஈரோடு டிபி.முத்துசாமி நினைவகத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. அனைத்து கூட்டுறவுத் துறை ஓய்வு பெற்றோர் நல அமைப்பு டன் இணைக்கப்பட்ட இச்சங்கத்தின் அமைப்புக் கூட்டத்திற்கு பி.ரத்தின வேல் தலைமை வகித்தார். சிஐடியு தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மே ளன துணைத்தலைவர் ஏ.கிருஷ்ண மூர்த்தி சிறப்புரையாற்றினார். இக் கூட்டத்தில், ஈரோடு மாவட்ட கூட்டு றவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத் தும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு வழங்க வேண் டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும், 1.9.2014க்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு கூடு தல் ஓய்வூதியம் கிடைக்கப்பெற வில்லை. எனவே உடனடியாக நிர்வா கம் வருங்கால வைப்பு நிதி ஆணை யத்தின் மூலமாக கூடுதல் ஓய்வூதி யம் பெறுவதற்கான அனைத்து பணி களையும் செய்து தர வேண்டும். ஆவின் ஊழியர்களைப் போல ஈமச் சடங்கு நிதி வழங்க வேண்டும். மாற்றி யமைக்கப்பட்ட சம்பள விகிதப்படி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு முழுத்தொகையும் வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக பி. ஆறுமுகம், செயலாளராக பி.ரத்தின வேல், பொருளாளராக பி.லோகநா தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் நிறைவுரை யாற்றினார்.
