தார் சாலை வசதி கேட்டு தவிச போராட்டம்
நாமக்கல், நவ.23- பொன்னேரி கைகாட்டி பகுதியிலிருந்து கோம்பை வரை முறையான தார் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்துள்ள, பொன்னேரி கைகாட்டி பகுதி யிலிருந்து கோம்பை சாலை வரை முறை யான தார் சாலை வசதி அமைத்து தரவேண் டும். இதற்கான நிலத்தை முழுமையாக அள வீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஞாயி றன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். கைகாட்டி பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மூத்த தோழர் மு.து.செல் வராஜ் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே. சிவச்சந்திரன், ஒன்றியப் பொருளாளர் கருப் பண்ணன், ஒன்றியச் செயலாளர் சத்யா, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.சதாசிவம், ஒன்றியத் தலைவர் எஸ்.கே. பழனிமுத்து உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது, டிச.5 ஆம் தேதிக்குள் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி யளிக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
