tamilnadu

img

மதுக்கடையை அகற்றக்கோரி மாதர், வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுக்கடையை அகற்றக்கோரி மாதர், வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, நவ.23- வெங்கட சமுத்திரத்தில் உள்ள  மதுபானக் கடையை அகற்ற வேண் டும் என வலியுறுத்தி அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம், வெங்கட சமுத்திரத்தில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இக் கடை மக்கள் கூடும் பிரதான இட மான நான்கு ரோடு சந்திப்பில் உள் ளது. இந்த கடையை கடந்து பள்ளி  மாணவர்கள், பெண்கள் செல்ல வேண்டும். இக்கடைக்கு வருவோர்  சாலையோரத்தில் அமர்ந்து மது  அருந்திவிட்டு, அவ்வழியாக செல் லும் மாணவிகள், பெண்களை  கேலி செய்கின்றனர். மேலும், குடித்துவிட்டு இருசக்கர வாகனம்  ஓட்டி விபத்தை ஏற்படுத்துகின்ற னர். இதனால் அப்பாவி மக்கள்  உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்  அமைந்துள்ள மதுபானக் கடை யை அகற்ற வேண்டும் என வலியு றுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் சனி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். வெங்கட சமுத்திரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க வட்டத் தலைவர் குப்பன், மாதர் சங்க வட்டச் செயலாளர் பி. கிருஷ்ணவேணி ஆகியோர் தலை மை வகித்தனர். மாதர் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, வட் டத் தலைவர் இளவரசி, வட்டப்  பொருளாளர் தங்கம், வாலிபர் சங்க  நிர்வாகிகள் விவேகானந்தன், ராஜேஸ்வரி, கவி நிலவன் ஆகி யோர் கோரிக்கையை வலியுறுத் திப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா ளர் தி.வ.தனுஷன் வாழ்த்திப் பேசி னார். முடிவில், வாலிபர் சங்க  வட்ட துணைத்தலைவர் ராஜேஸ் வரி நன்றி கூறினார்.