பிஏபி பிரதான கால்வாய்களை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
உடுமலை, நவ.23- திருமூர்த்தி அணையில் இருந்து விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு செல்லும் பிரதான கால்வாய் கரைகளை பலப் படுத்தும் வகையில், அணையில் இருந்து கடைமடை வரை செல்லும் பாசன கால்வாய்களை பொதுப்பணித்துறை அலுவ லர்கள் ஆய்வு செய்து, கால்வாய் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. உடுமலை திருமூர்த்தி அணை மூலம் பிஏபி பாசன திட்டத் தில், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், உடுமலை நகராட்சி, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் இருக்கும் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து, 48.39 கி.மீ., தூரம் அடர்ந்த வனப்பகுதிகளில் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள காண்டூர் கால்வாய் மூலம், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது. பிரதான கால்வாய் மூலம் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசன நிலங்க ளுக்கு தண்ணீர் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பல்லடம் பகுதியில் பிஏபி பாசன கால்வாயின் கரை உடைந்து தண்ணீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இந்த உடைப்பை சரி செய்ய, அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டு, உடைப்பு சரி செய்த பின் மீண்டும் தண்ணீர் திறக்கபட் டது. இதனால் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள், முறையாக கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காமல் கால தாமதம் ஆனது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறுகை யில், வரலாற்று சிறப்பு மிக்க பிஏபி திட்டத்தில் இன்னும் நல் லாறு அணை கட்டப்படாமல் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கால்வாய்களும் முறையாக பராமரிப்பு செய் யப்படுவதில்லை. மேலும் குடியிருப்பு பகுதியின் வழியாக வரும் கால்வாய்கள் குப்பை கொட்டும் இடமாக மாறி யுள்ளது குறித்து, பல முறை பொதுப்பணித்துறை அதி காரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் பல இடங்களில் கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்படுகிறது. உடனடியாக திரு மூர்த்தி அணையில் இருந்து கடைமடை வரை பொதுப் பணித் துறை அலுவலர்கள் முறையான ஆய்வு செய்து, கால்வாய் கரைகளை பலப்படுத்த வேண்டும். குப்பைகளை கொட்டாமல் இருக்கும் வகையில் வேலிகள் அமைக்க வேண் டும் என்றனர்.