பயிர்களை சேதப்படுத்திய யானை
உதகை, நவ.23- கூடலூர் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானை, அறுவடைக்கு தயாராக இருந்த நெல், வாழை உள் ளிட்ட பயிர்களை சேதப்படுத்திச் சென்றது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கம்மாத்தி பகுதியில் நாள்தோறும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, விவசாய நிலங்களில் பயிரிடப் படும் நெல் மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி வரு கிறது. இந்நிலையில், சனியன்று இரவு கம்மாத்தி வனப்பகுதி யிலிருந்து வெளியேறிய யானை, பிரசாந்த் என்பவரின் விளை நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றது. மேலும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சேதப்ப டுத்தி சாலையில் நடந்த சென்றதால் அவ்வழியாக வாகனத் தில் எதிரே வந்த நபர்கள் அச்சமடைந்தனர். எனவே, கிராமப் பகுதியில் உலா வரும் யானையின் நடமாட்டத்தை கண் காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையி னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.