பின்னப்படும் சதிவலை
நேபாள அரசியலில் ஜெனரேசன் இசட் (Gen Z) இளைஞர்கள் மூலம் வெடித்த கிளர்ச்சியானது, பல்லாண்டு கால எதிர்பார்ப்பு கள் நிறைவேறாத நிலையில் வெடித்தது என்றா லும், அது, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி -யுனை டெட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்- யுஎம்எல்) மீது வீசப்படும் அரசியல் சதியின் நிழ லாக மாற்றப்பட்டு வருகிறது என்று தெரிய வரு கிறது. பாரா மாவட்டத்தில் நடந்த மோதல்கள், 2026 மார்ச் 5 தேர்தலை குழப்பவும், நாட்டின் ஸ்திரமின்மையை அதிகரிக்கவும் தற்போ தைய அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவாளர்க ளால் திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என சிபிஎன்- யுஎம்எல் கட்சியினர் கருதுகின்றனர்.
சிபிஎன்- யுஎம்எல், ஒரு பெரிய அரசியல் சக்தியாக, நாடு முழுவதும் தமது அரசியல் நட வடிக்கைகளை மேற்கொள்ள ஜனநாயக உரிமை கொண்டுள்ளது. ஆனால், சிமாரா விமான நிலையத்தில் திட்டமிட்டு திரட்டப் பட்ட ஜென் இசட் குழுக்கள், கட்சியின் மூத்த தலைவர்களைத் தடுத்து நிறுத்தி வன்முறை யைத் தூண்டிய செயல், ஜனநாயக நடைமுறை களைப் புறக்கணிக்கும் அராஜகப் போக்கையே காட்டுகிறது.
உண்மையில், செப்டம்பர் 8 மற்றும் 9 போராட் டங்கள் சமூக ஊடகத் தடையை எதிர்த்த மாண வர்களால் தொடங்கப்பட்டன. ஆனால், வன்முறை வெடித்தவுடன் அவர்கள் விலகிக் கொண்டனர். எனவே, ஒட்டுமொத்த வன் முறைச் சம்பவங்களையும் ஜென் இசட் இயக்கம் என்று கூறுவது, தற்போதைய அர சாங்கம், கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தப் பயன்படுத்தும் ஒரு தந்திரமே ஆகும். இந்த வன்முறைகளையும் இளைஞர் எழுச்சியின் ஒரு பகுதியாகச் சித்தரிப்பது, “ஜென் இசட்-க்கு எதிரான சிபிஎன்- யுஎம்எல் “ என்ற ஒரு போலிச் சூழலை உருவாக்கும் நோக்கம் கொண்டது.
சிபிஎன்- யுஎம்எல், தற்போதைய அரசாங் கத்தை அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று கருதுகிறது. நாடாளுமன்றத்தை மீட்டெ டுப்பதற்கான அதன் கோரிக்கையும், தேர்த லைப் புறக்கணிக்கும் நிலைப்பாடும், சட்டத் தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற கட்சியின் திடமான நம்பிக்கையையே காட்டு கிறது. கட்சியின் தலைவர் கே.பி. சர்மா ஒலி மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையும், ஜன நாயக நெறிமுறைகளுக்கு எதிரான அத்து மீறலாகும்.
தேர்தலைப் புறக்கணிப்பவர்களை “அராஜ கத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள்” என்று பிரதமர் சுஷீலா கார்க்கி மறைமுகமாக விமர்சிப்பது, அர சியல் எதிர்ப்பை ஒடுக்கும் முயற்சி ஆகும். சிபிஎன்- யுஎம்எல், தேர்தலைத் தவிர்க்க முயல்வது, ஸ்திரமான மற்றும் சட்டப்பூர்வமான ஒரு சூழலை உருவாக்கும் வரை காத்திருக்கும் அதன் விருப்பத்தையே காட்டுகிறது.
எனவே, அமைதியற்ற சூழலுக்குக் கம்யூ னிஸ்ட் கட்சி காரணம் அல்ல. மாறாக, அதன் அர சியல் செயல்பாடுகளைத் தடுக்கவும், அதைத் தேர்தலிலிருந்து விலக்கி வைக்கவும் சதி வலை பின்னப்படுகிறது என்பது மட்டும் உண்மை.
