tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர்

பீகாரில் நிதிஷ் குமாரின் புதிய அமைச்சரவை ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளால் நிறைந்துள்ளது. இந்த அமைச்சரவை பீகார் மக்களின் முகத்தில் அறைந்தது போன்று உள்ளது. பல ஊழல் தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட விதம், காயத்தில் உப்பு தேய்ப்பது போன்றது.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்

3 கோடி உயிர்களை காப்பாற்றியதாகக் கூறி, டிடிபி (DTP - Diphtheria, Tetanus, Pertusis) தடுப்பூசியை ஆதரிக்கும்படி டென்மார்க் அரசாங்கத்தை பில் கேட்ஸ் கேட்டுக்கொண்டார். ஆனால் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில், தடுப்பூசி போடப்படாத சிறுமிகள் இறந்ததை காட்டிலும் 10 மடங்கு அதிகமாக தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் இறந்திருப்பதை டென்மார்க் அரசாங்கம் கண்டறிந்துள்ளது.

சிவசேனா (உத்தவ்) பொதுச் செயலாளர் ஆதித்யா தாக்கரே

மகாராஷ்டிரா அமைச்சரவைக் கூட்டத்தில் மிந்தே சமூகக் குழுவைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. முதலமைச்சர் மீதும், பாஜக கட்சி மீதும் கோபம் இருக்கட்டும். ஆனால் சுயநலத்திற்காக, மாநில அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணிப்பதால் மகாராஷ்டிர மக்களின் நலன் பாதிக்கப்படும்.

மூத்த எழுத்தாளர் சபா

குறும்பட வீடியோக்கள், செய்தியை கற்பனையற்ற உள்ளடக்கமாக மாற்றுவது வலதுசாரி அரசியலில் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதைப் பற்றி இன்னும் போதுமான அளவு பேசப்படவில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும்.