“ஆர்எஸ்எஸ் தலைவரின் வருகை மணிப்பூரில் மேலும் பதற்றத்தை தூண்டும்”
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நவ., 20, 21, 22 என 3 நாள் சுற்றுப்பயணமாக வன்முறையால் பற்றி எரிந்து கொண்டு இருக்கும் மணிப் பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். ஆர் எஸ்எஸ் நூற்றாண்டு விழாவிற்காக அவர் மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்எஸ்எஸ் தலைவர் வருகை மணிப் பூரில் மேலும் பதற்றத்தை தூண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் கெய் ஷாம் மேகசந்திர சிங் குற்றம்சாட்டியுள் ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறி யிருப்பதாவது: “மணிப்பூர் இன்னும் நெருக்கடியில் தான் உள்ளது. வன்முறை பதற்றம் நீடிக்கிறது. ஆனால் இந்த பதற்ற சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவரின் திடீர் வருகை மாநிலத்தின் நெருக்கடி யை மேலும் அதிகரிக்கும். ஆர்எஸ்எஸ் தலைவரின் வருகை மக்களின் துன்பங் களை விட கார்ப்பரேட் நிறுவன வளர்ச்சி யை வலுப்படுத்துவதற்கு மட்டுமே முன் னுரிமை அளிக்கும். மணிப்பூர் இன்னும் வரலாறு காணாத வன்முறை, இடப்பெய ர்ச்சி, சமூகப் பிளவு மற்றும் நிர்வாகத் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள நேர த்தில், அமைதி மற்றும் இயல்புநிலை யை மீட்டெடுப்பதற்கான உறுதியான திட்டத்தை ஒன்றிய அரசு அனுப்பும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர் வருகிறார்” என அவர் கூறியுள்ளார்.
