நான் புத்த மதத்தை பின்பற்றினாலும், மதச்சார்பற்றவன்" உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து விடைபெற்றார் பி.ஆர்.கவாய்
புதுதில்லி உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலை மை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த மே மாதம் 14ஆம் தேதி பதவியேற்றார். வரும் திங்கள்கிழமை (நவம்பர் 24) பி.ஆர்.கவாய்க்கு 65 வயதாகிறது. அதனால் அலுவல் நாளான வெள்ளிக்கிழமை அன்றுடன் அவர் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், தனது இறுதி பணி நாளன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் பி.ஆர்.கவாய் பேசுகையில், “உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொள்கிறேன். 1985ஆம் ஆண்டு சட்டத்துறை மாணவராகச் சேர்ந்தேன். இன்று பணி நிறைவின்போது நீதித்துறை மாணவனாக விலகுகிறேன். அரசியலமைப்பு நிலையான தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது எப்போது வேண்டுமானாலும் பரிணாமம் அடை யும். எனவே நீதிமன்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஒரு வழக்கறிஞராகவும், பின்னர் உயர்நீதி மன்ற நீதிபதியாகவும், அதன் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தபோதும் இதனை அதிகாரப் பதவியாக பார்க்கவில்லை. மாறாக சமூகத்திற்கு சேவை செய்வதற்கான, தேசத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு என்று நம்பியிருக்கிறேன். அம்பேத்கரின் போதனைகளிலிருந்தும், அரசியலமைப்பு முறையாக ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு முன்பு 1949 நவம்பர் 25ஆம் தேதி அவர் ஆற்றிய கடைசி உரையிலிருந்தும் தான் நான் உத்வேகம் பெறுவேன். டாக்டர் அம்பேத்கர் எப்போதும் சமூக மற்றும் பொருளா தார நீதிக்காக வாதிட்டார். அடிப்படை உரிமை களை, அரசின் கொள்கைகளுடன் சமநிலைப் படுத்துவதன் மூலம் நீதியை நிலை நாட்ட, எப்போதும் முடிந்தவரை நான் முயற்சித்தேன். எளிமையான தீர்ப்புகளை எழுதுவதில் நம்பி க்கை கொண்டுள்ளேன். அவை கடைக்கோடி மக்களுக்காக எழுதப்பட வேண்டும். நான் புத்த மதத்தை பின்பற்றினாலும், மதச்சார்பற்றவன்" என அவர் தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ண னுக்குப் பிறகு, பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஆவார். 6 மாதங்களாக பதவி வகித்த பி.ஆர்.கவாய், புத்த மதத்தை சேர்ந்த முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முக்கியத் தீர்ப்புகள் கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிப தியாக பதவி ஏற்ற பி.ஆர்.கவாய் பண மதிப் பிழப்பு செல்லுபடியாகும் மற்றும் தேர்தல் பத்திரத் திட்டங்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய தீர்ப்பு தன்மை குறித்து தீர்ப்பளித்த 5 நீதிபதி கள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் ஒரு பகுதியாக இருந்தார். அதே போல எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டு அனுமதி குறித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்விலும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்விலும், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் நீதித்துறை காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்ற தீர்ப்பிலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
