states

img

மோடி மற்றும் மம்தா அரசுகளிடமிருந்து மேற்குவங்கத்தை பாதுகாப்போம்! மோடி மற்றும் மம்தா அரசுகளிடமிருந்து மேற்குவங்கத்தை பாதுகாப்போம்!

மோடி மற்றும் மம்தா அரசுகளிடமிருந்து மேற்குவங்கத்தை பாதுகாப்போம்!  மோடி மற்றும் மம்தா அரசுகளிடமிருந்து மேற்குவங்கத்தை பாதுகாப்போம்!

11 மாவட்டங்கள் ; 19 நாட்கள் ; 1,000 கி.மீ., தூரம்

கொல்கத்தா ஒன்றிய மோடி அரசின் மக் கள் விரோத கொள்கைக ளையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத ஆட்சி யையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி “வங்கத்தை பாதுகாப்போம் நடைபயணம் (பங்ளா பச்சாவ் யாத்ரா)” என்ற பிரச்சாரத்தை துவங்குகிறது. 19 நாட்கள் - 1,000 கி.மீ., தொலை வில் வலம் வரக் கூடிய இந்த நடை பயண பிரச்சார இயக்கம் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப் பினரும், மாநிலச் செயலாளரு மான முகமது சலீம், மூத்த தலைவர் சுஜன் சக்கரவர்த்தி தலைமையில் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள தூபான்கஞ்சில் நவம்பர் 29 அன்று தொடங்குகிறது. 11 மாவட்டங் களைக் கடந்து, டிசம்பர் 17 அன்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத் தில் உள்ள காமர்ஹாட்டியில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் இந்த நடைபயணம் நிறைவு பெறுகிறது. இந்த நடைபயணத் தில் பல்வேறு மாவட்டங்களிலி ருந்து வரும் பல சிறிய நடைபயணங் களும் இணைய உள்ளன. அதில் மீனாட்சி முகர்ஜி போன்ற கட்சியின் இளம் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பாக முகமது சலீம் கூறுகையில், “ஒன்றிய மற்றும்  மாநில அரசுகளின் மக்கள் விரோத ஆட்சியை எதிர்க்க நடைபயணம் மூலம் உறுதிமொழி ஏற்க உள் ளோம். இந்த மாநில அளவிலான நடைபயணம், மேற்குவங்க மக்கள் எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சனைகளை முன்னிலைப் படுத்தும். ஜனநாயக விழுமியங்  கள், சமூக நீதி மற்றும் மக்களின் உரிமைகள் மீதான கட்சியின் உறு தியை மீண்டும் உறுதிப்படுத்தும். குறிப்பாக நடைபயணத்தின் போது மக்களின் பிரச்சனைகள் எழுப்பப்படும். அந்தப் பிரச்சனை களில் வாக்களிக்கும் உரிமை யைக் காப்பாற்றுதல், ஜனநாய கத்தைக் காப்பாற்றுதல், பள்ளிகள்  மற்றும் சுகாதார மையங்களைக் காப்பாற்றுதல், நுண்நிதி கடன்களி லிருந்து மக்களைக் காப்பாற்றுதல், பீடித் தொழிலாளர்களைக் காப்பாற்றுதல், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் களைக் காப்பாற்றுதல், கிக் தொழிலாளர்களின் உரிமை களைக் காப்பாற்றுதல் மற்றும் மேற்கு வங்கப் பெண்களைக் காப்பாற்றுதல் ஆகியவை  நடை பயணத்தின் போது முழக்கங் களாக எழுப்பப்படும். மக்களின் கருத்துக்கள் கேட்கப்படும்” என அவர் கூறினார்.