states

img

நாள்தோறும் அரசு ஊழியர்களை காவு வாங்கும் எஸ்ஐஆர்  குஜராத்தில் மாரடைப்பால் பிஎல்ஓ பலி

நாள்தோறும் அரசு ஊழியர்களை காவு வாங்கும் எஸ்ஐஆர்  குஜராத்தில் மாரடைப்பால் பிஎல்ஓ பலி

பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் தமிழ்நாடு, கேரளம்  உள்ளிட்ட 12 மாநிலங்களில் (யூனியன் பிரதேசம் சேர்த்து) வாக்கா ளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) நடை பெற்று வருகிறது. போது மான பயிற்சி, கால அவகாசம் இல்லாமல் எஸ்ஐஆர் செயல்படுத்தப் பட்டு வருவதால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (பிஎல்ஓ) பணிபுரியும் அரசு ஊழியர்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வழக்கமான பணிகளுடன் சேர்ந்து  எஸ்ஐஆர் பணியையும் மேற்கொண்டு வருவதால், பணி அழுத்தத்தால் தற் கொலை மற்றும் மாரடைப்புச் சம்பவங் களால் அரசு ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தற்கொலை மற்றும் மாரடைப்பு காரணமாக இதுவரை 5க்கும் மேற்பட்ட பிஎல்ஓ-க்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் எஸ்ஐஆர் பணி  அழுத்தம் காரணமாக பள்ளி ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள் ளார். கேடா மாவட்டத்தின் கபத்வஞ்ச் தாலுகாவில் உள்ள ஜம்பூடி கிராமத் தில் வசிப்பவர் ரமேஷ்பாய் பர்மர் (50).  தனது பகுதியில் பிஎல்ஓ ஆக பணிபுரியும் அரசு பள்ளி ஆசிரியரான இவர் வியாழக் கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந் தார். எஸ்ஐஆர் பணி அழுத்தம் காரண மாக ரமேஷ்பாய் உயிரிழந்ததாக அவரது சகோதரர் நரேந்திர பர்மர் குற்றம்சாட்டி யுள்ளார்.