தனியார் மூலம் மின்சாரப் பேருந்து இயக்கம் போக்குவரத்துக் கழகங்கள் சீர்குலையும் அபாயம்
இந்தியாவில் இயங்கும் சுமார் 60 அரசுப் போக்கு வரத்து நிறுவனங்களில், தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமே அனைத்துக் கிரா மங்களுக்கும், மலைக் கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது. இழப்பு ஏற்படும் எனத் தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் மக்கள் சேவைக் காக இயக்கப்படுகின்றன. கிராமப்புற சேவை மற்றும் மாணவர்களின் இலவசப் பயணம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.
நிதி நெருக்கடி மற்றும் தனியார்மய நடவடிக்கை
ஆனால் அதே வேளை, இதனால் ஏற்படும் இழப்பை அரசு முழுமையாக ஈடுகட்டாததால், போக்கு வரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால், தொழிலாளர் மற்றும் ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. புதிய பேருந்துகள் வாங்குவது, காலிப் பணியிடங்க ளை நிரப்புவது போன்ற அடிப்படைப் பணிகள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்குத் தீர்வு காண வேண்டிய அரசு, தற்போது தனியார்மய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
பேருந்து மற்றும் வழித்தடங்களின் எண்ணிக்கை குறைப்பு
மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். ஆனால், 2018-இல் அதிமுக அரசு பேருந்து எண்ணிக்கையைக் குறைக்கும் கொள்கையுடன் அரசாணைகளை வெளி யிட்டது. அந்த அரசாணையைத் தீவிரமாக அமல் படுத்திய திமுக அரசு, மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கையை 23,678-லிருந்து 20,500 ஆகக் குறைத்தது (3178 பேருந்துகள் குறைவு). மேலும், 20,839 ஆக இருந்த வழித்தடங்கள் 18,674 ஆகக் குறைக்கப்பட்டு, 2165 வழித்தடங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. தொழிலாளர்களின் எண்ணிக்கையும் 1,40,000-லிருந்து 1,05,000 ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.
பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், பண்டிகை மற்றும் திருவிழாக் காலங்களில் கழகங்கள் தனியாரிடம் வாடகைக்குப் பேருந்து களை எடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. தனியாரிடம் வாடகைக்குப் பேருந்துகள் எடுப்பதால் கழகங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால், போக்குவரத்துக் கழகங்கள் சீர்குலைந்து, தமிழக மக்களின் பயண வசதி பறிக்கப்படும்
மின்சாரப் பேருந்து: தனியார்மயத்தின் அடுத்தகட்ட நகர்வு
தற்போது சென்னையில் தனியாரின் மூலம் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுவது தனியார் மய நடவடிக்கையின் அடுத்த கட்டமாகும். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மின்சாரப் பேருந்துகளை இயக்குவதாக அரசு கூறினாலும், மின்சாரப் பேருந்தின் விலை அதிகம் மற்றும் தற்போதைய ஊழி யர்களுக்கு அதை இயக்கத் திறமை இல்லை போன்ற காரணங்களை அமைச்சரே குறிப்பிடுகிறார்.
ன்றிய அரசின் கொள்கையே, மின்சாரப் பேருந்து களைத் தனியாரிடம் வாடகைக்கு எடுத்து இயக்குவது அல்லது தனியார்-அரசு கூட்டுடன் (PPP) இயக்குவதுதான். இந்தக் கொள்கையைத்தான் தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிறது. 12 ஆண்டு கள் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் இந்தப் பணியை ஒப்படைப்பது, மிக மோசமான விளைவு களை ஏற்படுத்தி, போக்குவரத்துக் கழகங்களை அழிவுக்கு இட்டுச்செல்லும்.
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புக்கான உண்மையான தீர்வு
சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்க மின்சாரப் பேருந்துதான் ஒரே தீர்வு என்பது விவாதத்திற்கு உரியது. உண்மையில், சுற்றுப்புறச்சூழலைப் பாது காக்க பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதும், தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதும் தான் அடிப்படையான தீர்வு ஆகும். பொதுப் போக்கு வரத்து பலவீனமாக உள்ளதால்தான் வாகனப் பெருக்கம் ஏற்பட்டு சூழலை மோசமாக்குகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுப் போக்குவரத்து இயக்கப்பட்டால் மட்டுமே தனிநபர் வாகனப் பயன்பாடு குறையும்.
தனியார் மூலம் இயங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்
மின் பேருந்துகளைக் கழகங்களே இயக்காமல், தனி யாரிடம் ஒப்படைப்பதால் பல பாதிப்புகள் ஏற்படும்: H நிதி இழப்பு: இயக்கும் செலவு அதிகம் எனக் கூறி, தனியாரால் கழகங்கள் பெரும் இழப்பிற்கு உள்ளாக்கப்படும். மின்சார வாரியத்தைப் போலவே போக்குவரத்துக் கழகங்களும் நஷ்டம டைந்து, தனியாரை நம்பியிருக்க வேண்டிய நிலை உருவாகும். H பொறுப்பேற்பு: தனியார் செய்யும் தவறுகளுக்குப் போக்குவரத்துக் கழகங்கள் பொறுப்பேற்க வேண்டிய அவலநிலை ஏற்படும். இதனால் கிராமப்புற மக்களும், ஏழை நடுத்தர மக்களுமே பாதிக்கப்படுவர்.
சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை
தனியார் மின்சாரப் பேருந்துகள் வாடகைக்கு இயக்குவதால், போக்குவரத்துக் கழகங்களில் தொழி லாளர் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. நடத்துநர் பணியைக் கழகங்கள் பார்த்துக் கொள்ளும் என்று கூறிய அரசு, அதிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்தது. ஒப்பந்தத் தொழிலாளர் முறை என்பதே சமூக நீதிக்கு எதிரானது, ஏனெனில் இதில் இடஒதுக்கீடு முற்றிலும் மறுக்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்கான அரசு, அதற்கு எதிராகச் செயல்படுவது நியாயமில்லை. ஒன்றிய அரசின் தவறான கொள்கை களைத் தமிழக அரசு கடைப்பிடிக்காமல், பொதுப் போக்குவரத்தைப் பலப்படுத்த போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்த செலவு ஒப்பந்தம் (GCC): சாதகமல்ல…. பாதகமே!
மின்சாரப் பேருந்துகளுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், பணியாளர்கள் மற்றும் பரா மரிப்பு உட்பட அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த செலவு ஒப்பந்தத்தை (Gross Cost Contract - GCC) தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது, அதன் செயல்பாட்டுக் கட்டுப்பாடு மற்றும் நிதிச் சுயநிறைவில் பல அடிப்படைப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
மேற்கண்ட ஜிசிசி (GCC) ஒப்பந்தத்தில், ஓட்டுநர் நியமனம், சார்ஜிங் மேலாண்மை, தொழில்நுட்பப் பணியா ளர்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் என அத்தனை செயல்பாடுகளும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் படுகின்றன. இதனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தங்கள் இயக்கத் திறனை (Operational Capability) மெதுவாக இழக்கின்றன. மின்சார வாகனங்கள், பேட்டரி மேலாண்மை அமைப்பு (BMS), சார்ஜிங் மேலாண்மை போன்ற புதிய மற்றும் அத்தியாவசியமான தொழில்நுட்பத் திறன்கள் கழகங்க ளுக்குள் உருவாக எந்த வாய்ப்பும் இல்லை. பொதுப் போக்குவரத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்த தமிழகப் போக்குவரத்துக் கழகங்கள், ஒருமுறை வெளிப்புற ஒப்பந்தத்திற்கு முழுமையாகச் சார்ந்துவிட்டால், எதிர்காலத்தில் தாமாகவே மின்சாரப் பேருந்துகளை இயக்குவது என்பது சாத்தியமற்ற சூழ்நிலையை உருவாக்கி, அதன் மொத்த நிறுவனத் திறன்களும் அழிந்துவிடும்.
GCC ஒரு ‘செலவுப் பொறி’ (GCC Trap)
மொத்த செலவு ஒப்பந்தம் முதலில் மலிவாகத் தோன்றினாலும், காலப்போக்கில் இது ஒரு ‘செலவுப் பொறி’யாக மாறும் அபாயம் உள்ளது. மொத்த விலை குறியீடு (WPI) அல்லது நுகர்வோர் விலை குறியீடு (CPI) அடிப்படையில் ஆண்டுதோறும் செலவுகள் அதிகரிக்கும். அத்துடன், மின்சாரக் கட்டண உயர்வுக்கான கூடுதல் கோரிக்கைகள், பேட்டரி சிதைவு (Battery Degradation) காரணமாகக் கூடுதல் கட்டணம், பணியாளர் சம்பள உயர்வு மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் அபராத விலக்கு போன்ற அம்சங்கள் சேர்க்கப்படும்போது, ஒரு கிலோமீட்டருக்குக் கழகங்களிலிருந்து வசூலிக்கும் தொகை தொடக்க விலையைவிடப் பல மடங்கு உயர்ந்துவிடும். இந்தச் செலவுகளின் உண்மையான கட்டமைப்பு (உண்மையான மின் நுகர்வு, பராமரிப்புச் செலவு) வெளிப்படையாக இருக்காது. எல்லாச் செலவுகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுவதால், உண்மையான செயல்பாட்டுச் செலவு என்ன என்பது கழகங்களுக்குத் தெரியவே தெரியாது.
கண்காணிப்பு இடைவெளிகளும் சார்ஜிங் மேலாண்மைக் கட்டுப்பாடும்
இந்த ஒப்பந்தங்களைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் போதிய திறன் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய சவாலாகும். தினசரி இயக்கப்பட்ட கி.மீ., மின்சார நுகர்வு (kWh/km), சார்ஜர் இயக்க நேரம், முன் தடுப்புப் பராமரிப்பு போன்றவற்றைத் துல்லியமாகக் கண்கா ணித்து அபராதங்களை அமல்படுத்துவதில் உள்ள இடைவெளிகளைத் தனியார் நிறுவனங்கள் எளிதில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். மேலும், மின்சாரப் பேருந்து சேவையின் பாதி யளவு சார்ஜிங் மேலாண்மையைப் பொறுத்தது. ஆபரேட்டர் சார்ஜிங் தளத்தை முழுமையாகக் கட்டுப் படுத்தினால், சார்ஜர் செயலிழப்பு, முதலீட்டுத் தாமதம் அல்லது போதுமான சார்ஜிங் கிடைக்காததால் பயண ரத்து போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால், சார்ஜிங் தளம் கழகங்களின் கட்டுப்பாட்டில் இல்லாததால் உடனடியாகத் தீர்வு காண முடியாது.
ஆபத்து மாற்றீடு கோட்பாட்டில் மட்டுமே உள்ளது
GCC ஒப்பந்தம், ஆபத்துகளைத் தனியாருக்கு மாற்றும் ‘இடர் பரிமாற்ற மாதிரி’ (Risk Transfer Model) என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அது முற்றிலும் மாறுவதில்லை. போக்குவரத்து நெரிசல், சார்ஜர் செயலிழப்பு, மின்சாரத் தடங்கல், திருவிழா நெரிசல் அல்லது வண்டி பழுதடைவு போன்ற காரணங்கள் “சரியான காரணங்கள்” (Valid Reasons) என்று கூறி ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படாமல் விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் சேவைப் பாதிப்புக்கு, பொதுமக்களின் முன் அரசுப் போக்குவரத்துக் கழகமே பழி சுமக்க நேரிடும். பேட்டரி செயல்திறன் குறைபாடுகள் ‘இயற்கை யான சீரழிவு’ என்று கூறி அபராதம் தவிர்க்கப்பட்டாலும், ரேஞ்ச் குறைவு மற்றும் பயண ரத்து ஆகிய வற்றின் தாக்கம் கழகங்களின் சேவையையே பாதிக்கும்.
தொழில்நுட்ப ரகசியங்களும் நீண்டகாலச் சிக்கலும்
தனியார் ஆபரேட்டர்கள் தங்களின் தனிப்பட்ட சார்ஜிங் அமைப்பு, டெலிமாட்டிக்ஸ் மற்றும் தகவல் தளங்கள், தனியுரிமை கனெக்டர்கள் போன்ற தொழில்நுட்ப ரகசியங்களைக் கழகங்களிடமிருந்து மறைப்பார்கள். இத னால் ஒப்பந்தம் முடிந்த பிறகும், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மாற்ற முடியாத தொழில்நுட்பச் சிக்கலில் சிக்க நேரிடும். வேறு ஆபரேட்டருக்கு மாறுவதோ அல்லது தாமாகவே இயக்குவதோ கடின மான சூழ்நிலையை இது உருவாக்கும்.
முடிவாக, மொத்த செலவு ஒப்பந்தங்கள் மின்சாரப் பேருந்துகளை விரைவாக அறிமுகப்படுத்தப் பயனுள்ள தாக இருந்தாலும், இதை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் திறன், கட்டுப்பாடு, தொழில்நுட்பச் சுயநிறைவு மற்றும் செயல்பாட்டு நுண்ணறிவை மெதுவாகப் பலவீனப் படுத்தி, நீண்டகாலத்தில் பொதுப் போக்குவரத்துத் துறைக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
