பூதாகரமான பிரச்சனை ஆகும் முன் எச்சரிப்பது எங்கள் கடமை! - அ. சவுந்தரராசன்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த முறை (Contract System) மற்றும் வெளிமுகமை (Outsourcing) மூலம் வேலை செய்விப்பதைத் தமிழக அரசு தனது கொள்கையாகவே அறிவித்துச் செயல் படுத்துகிறது. அரசின் இந்த நிலை, திமுகவின் அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்கே முற்றிலும் எதிரானது. நவீன தாராளமயக் கொள்கைகளை அப்படியே ஏற்றுச் செயல்படுத்துவதால் இந்தச் சறுக்கல் ஏற்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. இந்தக் கொள்கையின் ஒரு வடிவமாகவே மின்சாரப் பேருந்து இயக்கம் உருப்பெற்றுள்ளது. சமூகநீதிக்குப் பின்னடைவு மின்சாரப் பேருந்துகளை இயக்குவதைத் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டார்கள். இந்த இயக்கத்தில் ஈடுபடுகிற அத்தனை தொழிலாளர்களும் ஒப்பந்த முறையில் தான் அமர்த்தப்படுவார்கள். இது ஒரு மிகப்பெரிய உழைப்புத் திருட்டு ஆகும். இப்படி ஒப்பந்த முறை யில் நியமனம் செய்யப்படுவதால், சமூகநீதி அடி பட்டுப் போகிறது. இடஒதுக்கீடு என்பது ஒரு சட்டக் கட்டாயமே இல்லாமல் போகிறது. சமூகநீதிக்கான அரசிற்கு இது அழகல்ல. எனவே, அரசு ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும். நஷ்டத்தை ஏற்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மின் பேருந்துகளைத் தனியார் இயக்கும் போது, ஓடுகிற ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு தொகையை அரசு நிர்ணயித்துள்ளது. வருமானம் குறைவாக இருந்தாலும், இந்தத் தொகையைக் கழகங்கள் அந்தத் தனியாருக்குத் தண்டமாக செலுத்த வேண்டும். வரவுக்கும் செலவிற்கு மான வித்தியாசத் தொகை யைக் கழகங்களுக்கு அரசு வழங்கினால், தனி யாரைவிட மிகச் சிறப்பாகக் கழகங்களே மின் பேருந்து களை இயக்கும் திறன் பெற்றுள்ளன. எனவே, அரசின் இந்தத் தனியார்மய முடிவு, பெரும் சமூக விளைவுகளை உண்டாக்கும் என்பதை அரசு உணர மறுப்பது விந்தையாக உள்ளது. இந்த விவகாரம் பூதாக ரமாகிவிடும் என்று அரசை எச்சரிக்கை செய்ய வேண்டிய பொறுப்பு சிஐடியுவிற்கு உள்ளது. எனவே, அரசு இந்தத் தவறான முடிவிலிருந்து விலகி, சரியான முடிவிற்குத் திரும்ப வேண்டும்.
