தனியார்மய முயற்சிகளை எதிர்த்து போராட தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபடுவோம்!
2014 மே 26-ஆம் தேதி முதல் ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் நாளுக்கு நாள் பின்னோக்கிச் செல்லும் நிலையிலேயே அதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன. நாடாளுமன்றம்/சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை, ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்களின் சுதந்திரத்தைக் குறைத்து, அவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைக்க பாஜக அரசு தீவிர நடவடிக்கைகளை மே
பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள்
2016 நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பு நீக்கம், 2017 ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி அமலாக்கம் போன்ற நடவடிக்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்தன. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், உலகப் பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் 101-வது இடத்தில் உள்ள இந்தியாவில், உணவுக்கான மானியம் 27 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 25 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். ஆனால், வேலைவாய்ப்புக்கான எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் மற்றும் பறிக்கப்பட்ட உரிமைகள் ஒன்றிய பாஜக அரசு
, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 29 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி அமைத்தது. 2020 செப்டம்பர் 22 அன்று, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், விவாதமின்றி இந்தச் சட்டத்தொகுப்புகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி நாடு முழுவதும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஒன்றிய மோடி அரசு, உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டு, தொழி லாளர்களின் உரிமைகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பறித்து வருகிறது. மேலும், ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2025 அக்டோபர் 8 அன்று புதிய தேசியத் தொழி லாளர் கொள்கைக்கான ("ஷ்ரம் ஷக்தி நீதி 2025") நகலை வெளியிட்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்தில் மாநில அரசின் நடவடிக்கை
1939-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 2019 ஜூன் மாதம் வரை நடைமுறையில் இருந்தது. 1988-இல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இச்சட்டத்தில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான திருத்தங்கள் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது. இடதுசாரிகளின் வாதத்தால் ஓரிரு திருத்தங்களுடன் அன்றைய சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது. 2014-இல் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர், சாலை விபத்துகளைத் தவிர்ப்பது எனும் பெயரில் 'சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா-2014' என்ற பெயரில் சட்டத்தை மாற்ற முயன்றது. அகில இந்திய சாலைப் போக்குவரத்து சம்மேளனம் (Airtwf) மற்றும் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு இறுதியில் கைவிடப்பட்டது. ஆனால், இரண்டாவது முறையாக மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது, தங்களுக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி இருக்கும் மோட்டார் வாகன சட்டத்திலேயே 92 திருத்தங்களை மேற்கொண்டு, ஜூலை 2019 முதல் சட்டமாக்கி அமலாக்க நடவடிக்கை எடுத்தது. இதன் அடிப்படையில்தான் BNS 106(1), 106(2) போன்ற மோட்டார் தொழிலாளர்களைப் பாதிக்கும் விதத்தில் ஒன்றிய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தக் கொள்கைகளின் பின்னணி யில்தான், தமிழக அரசும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்தம்-2019-இன் படி பல நடவடிக்கைகளை (அரசு உத்தரவுகள் 8.7.2021, 19.10.2022, 14.2.2023) எடுத்திருக்கிறது. இது அரசுப் போக்குவரத்து உள்ளிட்டு சாலைப் போக்கு வரத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர் களைப் பாதிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
தமிழக அரசின் தனியார்மய முயற்சிகள் தமிழக அரசானது,
அரசுப் போக்குவரத்தைத் தனியார்மயமாக்கும் நோக்கோடு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பல பணிகள் காண்ட்ராக்ட் கேஷூவல் முறை, தொழில்நுட்பப் பிரிவில் வேலைப் பயிற்சி, சென்னை புறநகர்ப் பகுதிகளில் மினி பேருந்துகள் அவுட் சோர்சிங் முறையில் இயக்குவது மற்றும் மாநகரப் பணிமனைகளின் இடத்தைக் கொடுத்து மின்சாரப் பேருந்துகளைத் தனியார் மூலம் இயக்குவதற்கான மறைமுக முயற்சிகளைச் செய்து வருகிறது. பொருளாதாரத்தின் அச்சாணி யாகவும், பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ள பொதுப் போக்குவரத்துக்கு ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் உரிய முக்கியத்துவத்தை வழங்குவதில்லை. கார்ப்பரேட் முதலாளி களுக்குச் சேவைகள் செய்யும் அடிப்படை யிலேயே தனியார் வாகனங்களை ஊக்குவிக்கின்றனர். இந்நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஒன்று பட்டு போராடுவது மிக அவசியமாகும்.
