tamilnadu

img

ஆர்எஸ்எஸ் திட்டத்தை செயல்படுத்தும் தேர்தல் ஆணையம்!

ஆர்எஸ்எஸ் திட்டத்தை செயல்படுத்தும் தேர்தல் ஆணையம்!

திருப்பூர், நவ.21- ஆர்எஸ்எஸ்- இன் நோக்கத்தை  தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் என்ற பெயரில் செயல்படுத்துகிறது என சிபிஎம் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் குற்றச்சாட்டினார். திருப்பூர் வெள்ளியங்காட்டில் வியாழனன்று நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந் தம் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கை மக்களி டம் படிப்படியாக குறைந்து வரு கிறது ஆய்வு நிறுவனங்கள் நட.த் திய கருத்துக் கணிப்பில் தெரியவந் துள்ள. 11% பேர் மட்டுமே தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல் படுகிறது. 64 சதவீதம் பேர் இந்திய தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசு அல்லது ஏதோ ஒரு அழுத்தத்திற்கு உட்பட்டு செயல்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி 110 தேர்தல் பிரச் சார கூட்டங்களில் பங்கேற்று மத வெறி, வெறுப்பை தூண்டும் வகை யில் பேசி இருக்கிறார். ஆனால் தேர் தல் ஆணையம் ஒரு சிறிய வழக்கை கூட மோடி மீது பதிவு செய்ய வில்லை என்று ஜனநாயகத்திற் கான அமைப்பு ஆய்வு செய்து தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணை யம் பாரபட்சமாக செயல்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப முடிவுகளை மாற்றுகின்றனர்.  தமிழ்நாட்டில் தற்போது நடை பெறும் எஸ்ஐஆர் கணக்கெடுப் பில், சான்று ஆவணங்கள் பட்டிய லில் 13 வது ஆவணமாக, கடந்த ஜூலை 1ஆம் தேதி பீகார் எஸ்ஐஆர் இன் ஆவணத்தை காட்டலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள் ளது. தமிழ்நாட்டில் பீகார் எஸ்ஐஆர் ஆவணத்தை சான்றாக காட்ட அனு மதிப்பது சரியா?  தற்போதைய எஸ்ஐஆர் எல்லா  கட்சிகளுக்குமே பிரச்சனை தான்.  எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்து உச்ச  நீதிமன்றம் போனால், அதிமுக இதை ஆதரித்து நீதிமன்றத்திற்கு போகிறது. உச்சநீதிமன்றம் அதி முக மனுவை தள்ளுபடி செய்தது. எதற்காக அதிமுக போனது என்று தெரியவில்லை. அவர்கள் அசிங் கப்பட்டது தான் மிச்சம். வேண்டு மானால் தேர்தல் ஆணையத்தில் நான்காவது தேர்தல் ஆணையராக தங்களை நியமிக்க கோரி மனு போடலாம். மக்கள் மீது அதிகாரம் செலுத் துங்கள் என்று சாவர்க்கர் சொன்ன ஆர்எஸ்எஸ் கருத்தை தேர்தல் ஆணையம் செய்கிறது. நமது அர சியல் சட்டத்தின் படி மக்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள். உள் ளாட்சி தொடங்கி நாடாளுமன்றம் வரை அதிகாரம் படைத்தவர்கள் மக்களே. ஆனால் மக்கள் மீது அதி காரம் செலுத்த வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ்-ன் நிலைப்பாடு. இதற்கு முன்பு ஒரே நாடு ஒரே  தேர்தல் என்ற மசோதாவை நாடா ளுமன்றத்தில் பாஜக அரசு தாக்கல் செய்தது. மூன்றில் இரண்டு பங்கு  பெரும்பான்மை ஆதரவு இல்லா மல் அதை சட்டமாக நிறைவேற்ற  முடியாது என்று தெரிந்தே தாக்கல்  செய்தனர். அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாடா ளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மசோ தாவை அனுப்பினர். அதில் இடது சாரிகளுக்கு இடம் தரவில்லை. வரலாற்றில் முன் எப்போதும் இல் லாத அளவிற்கு கூட்டுக் குழு கூட் டத்திலிருந்து எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்தனர்.  எதிர் கருத்துக்களை சொல்லி யும் அனுமதி இல்லை பதிவு செய்ய மாட்டோம் என்று மறுத்தனர். ஆர்எஸ் எஸ்-இன் நிகழ்ச்சி நிரலை அம லாக்க துடிக்கின்றனர். தமிழ்நாட் டில் பிற மாநில வாக்காளர்களை கொண்டுவந்து சேர்த்து, இங்குள்ள  வாக்காளர்களை நீக்கிட முயற்சிக் கின்றனர். குடிமக்களின் வாக்குரி மையை பறிக்கும் தேர்தல் ஆணை யத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராட வேண்டும், என் றார். முன்னதாக, இக்கருத்தரங்கத் திற்கு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் சா.பிரவீன் குமார் வரவேற்றார். மாவீரன் பகத் சிங் உருவாக்கிய நகஜவான் பாரத் சபா நூற்றாண்டு பற்றியும், ஜனநா யகத்தை காப்பதற்கான வாலிபர் சங்கத்தின் போராட்டம் குறித்தும் மாநிலச் செயலாளர் எஸ்.கார்த் திக் உரையாற்றினார். எஸ்ஐஆர் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள குள றுபடிகள் குறித்து மக்கள் பிரதி நிதிகளாக செயல்பட்ட பி.முத்து சாமி, கே.கணேசன் மற்றும் ஊத்துக் குளி பேரூராட்சி கவுன்சிலர் கு.சரஸ் வதி, பூண்டி நகராட்சி கவுன்சிலர் கள் பி.சுப்பிரமணியம், தேவராஜ் ஆகியோர் விளக்கினர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பால முரளி, மாநிலக்குழு உறுப்பினர் ர.சுதா ஆகியோர் உரையாற்றினர். எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வது குறித்து மாவட் டப் பொருளாளர் க.சிந்தன் விளக்கி கூறினார். முடிவில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் மௌனிஷ் கண் ணன் நன்றி கூறினார்.