பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்
சேலம், நவ.21- பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத் தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பலர் கலந்து கொண்ட னர். அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் 5 ஆவது அகில இந்திய மாநாட்டு, மண்டல கருத்தரங் கம் சேலம் ஒய்எம்சிஏ ஹாலில் வெள்ளி யன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்மணி வரவேற்றார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜசேகர் துவக்கவுரையாற்றினார். ‘அரசியல் சாசனத்தை பாதுகாப்போம்; மதச்சார்பின்மையை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலய பொது மேலாளர் ஆர்.பத்ரி கருத்துரை யாற்றினார். ‘ஓய்வூதிய மாற்றமும் ஓய் வூதிய சட்ட திருத்தமும்’ குறித்து சங்கத் தின் பொதுச்செயலாளர் கே.ஜி.ஜெய பால், ‘பொதுத்துறையை பாதுகாப் போம்; பிஎஸ்என்எல்-யை பாதுகாப் போம்’ என்ற தலைப்பில் ஏஐபிடிபி உதவி பொதுச்செயலாளர் ஆர்.முரளி தரன் நாயர் ஆகியோர் கருத்துரை யாற்றினர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் மதியழகன் (சேலம்), ஆர். கோபாலன் (தருமபுரி), சி.தங்கவேல் (வேலூர்), ஆர்.சதாசிவம் (நீலகிரி), பி. சின்னசாமி (ஈரோடு), பி.சவுந்தர பாண் டியன் (கோவை), மாவட்டச் செயலா ளர்கள் பி.பாஸ்கர் (தருமபுரி), பி.முரு கன் (வேலூர்), ஏ.குடியரசு (கோவை), வி.மணியன் (ஈரோடு), ஏ.ஆரோக்கிய நாதன் (நீலகிரி) உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாநில உதவிச் செயலாளர் இ.கோபால் நன்றி கூறி னார்.
