விவசாயிகள் சங்க அந்தியூர் ஒன்றிய மாநாடு
ஈரோடு, நவ.21- விவசாயிகள் சங்க அந்தி யூர் ஒன்றிய மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு மாவட் டம், அந்தியூர் தாலுகா 8 ஆவது மாநாடு வெள்ளி யன்று, குருவரெட்டியூரில் நடைபெற்றது. தாலுகா தலைவர் பி.ஆனந்தராசு தலைமை வகித் தார். எஸ்.மாதப்பன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். ஆர்.கணேசன் அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். ஆர்.சிவானந்தம் வர வேற்றார். மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனு சாமி துவக்கவுரையாற்றினார். தாலுகா செய லாளர் எஸ்.வி.மாரிமுத்து அறிக்கையை முன் வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் வாழ்த்திப் பேசி னார். இம்மாநாட்டில், தோணிமடுவு தடுப் பணை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேட்டூர் அணையின் உபரி நீரை கொண்டு வந்து அம்மாபேட்டை, அந்தியூர் ஒன்றியங்களில் உள்ள ஏரி, குளம், குட்டை களை நிரப்ப வேண்டும். அந்தியூர் தாலுகா வில் ஜீரோ மதிப்பிலாக்கப்பட்டுள்ள நிலங்க ளின் நிபந்தனையை உடனடியாக நீக்க வேண் டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலை வராக ஆர்.கணேசன், செயலாளராக பி. ஆனந்தராசு, பொருளாளராக டி.வெங்கடா சலம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங் கத்தின் மாநில துணைத்தலைவர் பி.டில்லி பாபு நிறைவுரையாற்றினார்.
