4 ஆவது நாளாக நில அளவை அலுவலர்கள் போராட்டம்
தருமபுரி, நவ.21- 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் நடைபெற்று வரும் வேலை நிறுத்த போராட்டம், வெள்ளியன்று 4 ஆவது நாளாக தொடர்ந்தது. நில அளவர்களாக ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறு வட்ட அளவர் பதவியை மீள் தரம் உயர்த்தி வழங்க வேண்டும். பட்டா மாறுதல் உள்ளிட்ட நில அளவைப் பணிகளை கருத்தில் கொண்டு, உடனடியாக நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகி றது. அதன்படி, வெள்ளியன்று 4 ஆவது நாளாக காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது. தருமபுரி, நாமக்கல், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்க ளில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அர சின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இச்சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
போக்சோ வழக்கில் முதியவருக்கு சிறை
ஈரோடு, நவ.21- சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள கொங்கம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (69). இவர் கடந்தாண்டு ஜூலை 8 ஆம் தேதி அப்பகுதியில் விளை யாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அவர் சிறுமியை அழைத்துச் செல்வதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சத்தம் போட்டதில் அக்கம்பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பவானி அனைத்து மகளிர் காவல் துறையினர் சுப்பிர மணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சொர்ண குமார் வியாழனன்று தீர்ப்பளித்தார். அதில் சுப்பிரமணிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராத மும் விதித்து தீா்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறு மிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வும் அவர் பரிந்துரைத்தார்.
முதல்வர் வருகை: முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு
ஈரோடு, நவ.21- ஈரோட்டில் நவ.26 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில், முதல் வர் பங்கேற்க உள்ள நிலை யில், அதற்கான முன்னேற் பாடுகள் குறித்து அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டம், அரச்ச லூர் அருகில் ஓடாநிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை-யின் முழு உருவச்சிலை அமைக்க அடிக் கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. அதேபோல, வடு கப்பட்டி கிராமம், ஜெய ராமபுரத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான்-னின் உருவச் சிலையுடன் கூடிய அரங்கம் திறப்பு விழா நவ.26 ஆம் தேதியன்று நடைபெறவுள் ளது. மேலும் சோலார் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் நிகழ்வில் முதல் வர் ஸ்டாலின் கலந்து கொள் ளவுள்ளார். அதற்கான பணி குறித்து வியாழனன்று அமைச் சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.
குட்கா விற்பனை: ரூ.2.17 கோடி அபராதம்
ஈரோடு, நவ.21- ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை சம்ப வம் தொடர்பாக, நடப்பாண்டில் இதுவரை ரூ.2.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடை பெற்று வருகிறது. இதனை தடுக்க காவல் துறை, உணவு பாதுகாப்புத்துறை, உள் ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரி அருகாமையில் உள்ள கடைக ளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர். இத்தடையினை மீறி விற்பனையில் ஈடு படும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடை மூடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை புகையிலைப் பொருட் கள் விற்பனை செய்த 807 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு, ரூ.2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அரசு கணக் கில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்து 452 கிலோ புகையிலைப் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகை யிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து புகார்களை 0424 - 2223545 மற்றும் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு புகார் அளிக்கும் நுகர்வோர்களின் விபரம் ரகசியமாக வைக் கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.கந்த சாமி தெரிவித்துள்ளார்.