அரசியல் வஞ்சகத்தின் உச்சம்!
கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு நிராகரித்ததன் மூலம், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையான சமத்துவத்தை அது காலில் போட்டு மிதித்துள் ளது. இது, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒரு நீதி என்ற அப்பட்டமான அரசியல் வஞ்ச கத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயில் கொள்கை 2017-இன் படி, 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களே மெட்ரோ திட்டமிடலைத் தொடங்கலாம். ஆனால், எந்த ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பு என்பதை ஒன்றிய அரசு வேண்டு மென்றே மறைக்கிறது. தமிழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோவை (15.84 லட்சம்) மற்றும் மதுரை (சுமார் 15 லட்சம்) மக்கள் தொகை 20 லட்சத்திற்குக் குறைவாக இருப்பதாகக் கூறி, அனுமதி மறுத்திருக்கிறது.
அதேசமயம், அதே 2011 கணக்கெடுப்பின்படி இதைவிடக் குறைவான மக்கள் தொகை கொண்ட குருகிராம் (9 லட்சம்), புவனேஸ்வ ரம் (8.86 லட்சம்), ஆக்ரா (17.6 லட்சம்), மீரட் (14.2 லட்சம்) போன்ற நகரங்களுக்கு, எதிர்கால வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அவ சரமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்சம், தமிழகம் எதிர்காலத்தில் வளர்ச்சிய டையக் கூடாது என்ற கெடு நோக்கமன்றி வேறென்ன? இது தமிழகத்தின் வளர்ச்சியைக் குழிதோண்டிப் புதைக்கும் சதி!
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் தராமல் ஐந்து ஆண்டுகளாக இழுத்தடித்து, தமிழகத்திற்கு ரூ. 9,000 கோடி கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தி யது தற்செயலானது அல்ல. அதே காலகட்டத் தில், நாக்பூர், குர்கான், புனே மெட்ரோ திட்டங்க ளுக்கு மின்னல் வேகத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
புதிய கல்விக்கொள்கையின் கீழ் இந்தியை கட்டாயமாக்க மறுத்ததற்காக ரூ. 4,000 கோடி நிதி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட மறுத்ததால் ரூ. 2,200 கோடி மறுக்கப்பட்டிருக்கிறது.
பேரிடர் காலங்களில் பாஜக ஆளும் மாநி லங்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங் கப்படும்போது, தமிழகம், கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் சேத மதிப்பீ டுகளை சமர்ப்பித்தாலும் உரிய நிதி வழங்கப் படுவதில்லை. அண்மையில், ஏற்பட்ட பேரிடர்க ளின் போதும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதே இதற்குச் சான்று.
திட்ட அனுமதி, நிதிப் பகிர்வு, பேரிடர் நிவார ணம் என அனைத்துத் தளங்களிலும், தமிழகத் தின் வளர்ச்சியைத் தடுப்பதும், அதன் நிதி ஆதாரங்களைச் சுரண்டுவதும் மட்டுமே ஒன்றிய பாஜக அரசின் இலக்காக மாறியிருக்கிறது. கூட் டாட்சிக் கொள்கையின் அடிப்படையான சமத்துவத்தை சிதைக்கும் இந்த அரசியல் வஞ்ச கம் நாட்டின் ஜனநாயகத்திற்கே விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். வளர்ச்சியைத் தடுத்து தமிழ கத்தை முடக்க நினைக்கும் இந்தச் சதியை தமிழக மக்கள் முறியடிப்பார்கள்.
