வஞ்சிப்பதையே வேலையாய்...
தமிழ்நாட்டில் நெல்கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இதன் பிறகாவது அவ்வாறு மோடி அரசு செய்யுமா என்பதே கேள்வி!
கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற கடிதத்தை ஒன்றிய அரசுக்கு எழுதியிருந்தார். கடும் மழையால் நெல் முளைத்துப் போய் வீணாகிவிட்டிருந்த நிலையில்தான் அந்தக் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் ஒரு வாரம் கழித்து மூன்று குழுக்களை அனுப்பி ஆய்வு செய்ய வைத்தது.
அந்தக் குழுக்கள் 12 மாவட்டங்களில் அக் டோபர் 25, 26, 27 என மூன்று நாட்கள் ஆய்வு செய்தது. வாளாடி நெல் கொள்முதல் நிலை யத்தில் நெல்லின் ஈரப்பத அளவு 20.5 சதவீதமாக இருந்தது. அந்த குழுவினரிடம் விவசாயிகள் ஈரப்பத அளவை உயர்த்தும் முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட னர். ஆனாலும் ஒரு மாதமாகும் நிலையிலும் கூட ஒன்றிய அரசு ஈரப்பத உயர்வு முடிவு அறிக்கை யை வெளியிடவில்லை. தற்போது மீண்டும் கனமழையால், அறுவடையான நெல்மூட்டை கள் பாதிக்கப்படும் நிலையிலேயே முதல்வர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
ஒன்றிய பாஜக அரசு 2014இல் பதவியேற்ற நாள் முதலே விவசாயிகளுக்கு விரோதமா கவே நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு ஒன்றரை மடங்கு விலை வழங்குவதாகக் கூறிய தேர்தல் வாக்கு றுதி காற்றிலேயே கலந்து விட்டது. 2019இல் விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் போராட்டம் நடத்தியபோது அதை விலக்கிக் கொள்வதற் காக கொடுத்த வாக்குறுதியும் ஐந்தாண்டுக ளாகியும் நிறைவேற்றப்படவில்லை.
ஏற்கெனவே கட்டுபடியான விலை கிடைக் காமல் அவதிப்படும் விவசாயிகள் தற்போது ஈரப்பதம் அதிகமாக உள்ளது எனக்கூறி கொள் முதல் செய்ய மறுக்கப்படுவதாலும் பாதிக்கப்படு கிறார்கள். நெல்லின் ஈரப்பத அளவை மாநில அரசே - அந்தந்த மாவட்ட ஆட்சியரே - தீர்மா னிக்கச் செய்வதே விவசாயிகளுக்குப் பயன ளிப்பதாகும் என்று மத்திய ஆய்வுக் குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் எந்தக் கோரிக்கையுமே ஏற்கப்படவில்லை.
விவசாயிகளை வஞ்சிப்பதையே வாடிக்கை யாகக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. கார்ப்பரேட் நண்பர்களுக்கு ஒரு கஷ்டம் என் றால் துடிதுடித்துப் போகும் மோடி அரசு விவசா யிகளை கண்ணீர்க் கடலில் தத்தளிக்க வைப்ப தையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் கட்டுப்பாட்டில் நடந்து கொண்டிருந்த நெல்கொள்முதலை மத்திய கூட்டுறவுத் துறையை துவங்கி ஒன்றிய அரசு கைப்பற்றும் விதத்தில் நடந்தது தான் இந்தக் கொடுமைக்குக் காரணம். எனவே துன்பத்தி லும் துயரத்திலும் வாடும் விவசாயிகளைக் கரை யேற்ற இப்போதாவது நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய அரசு தாமதமின்றி அறிவித்திடவேண்டும்.
