முட்டை விலை புதிய உச்சம்; காரணம் என்ன?
நாமக்கல், நவ. 19 - முட்டை உற்பத்திக்கு பெயர் பெற்றது நாமக்கல் மாவட்டமாகும். சிறு, குறு பண்ணைகள் என 1300-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் நாமக்கல்லில் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தினமும் 80 லட்சம் முதல் 1 கோடி முட்டைகள் வரை நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் உணவு வழங்கும் பொழுது, சத்துணவாக முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான முட்டைகளும் நாமக் கல்லில் இருந்து தான், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அரசுப் பள்ளி களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் முட்டை விலை விவரங் களை தொகுத்து வெளியிட்டு வருகிறது. இதில், கடந்த சில வாரங்களாக முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த மாதத்தில் 5 ரூபாய் வரை விற்கப்பட்ட வந்த முட்டை, தற்போது ரூ. 6.05 வரையிலும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. முட்டை விலை உயர்வி னால் முட்டை பயன்பாடு சார்ந்த உணவுப் பொருட்களின் விலையையும் கணிசமாக அதிகரிக்க வேண்டிய சூழலில் கடை வியாபாரிகள், முட்டை விற்பனையாளர் கள், உணவகங்கள் நடத்துவோர் தள்ளப் பட்டுள்ளனர். முட்டை விலை தொடர்ந்து உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க மண்ட லத் தலைவர் கே. சிங்கராஜா கூறுகையில், “தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல் வேறு மாநிலங்களுக்கும் நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் ஏற்று மதி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலங்களிலுமே சீசனுக்கு ஏற்றாற்போல முட்டை விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வருவது வாடிக்கையான ஒன்றா கும். ஆனால் கடந்த சில நாட்களாக முட்டை விலை அதன் உச்சத்தை தொட்டு தற்போது ஆறு ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு கார ணங்கள் உள்ளன. முதலில் தற்போதைய சூழலைப் பொறுத்தவரை குளிர்காலம் என்பதால், வெளிமாநிலங்களில் முட்டை சார்ந்த உணவு தேவைக்காக முட்டைகள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவது விலை அதிகரிப்புக்கு ஒரு காரணம். முக்கிய மாக, டிசம்பர் மாத இறுதியில் வரும் கிறிஸ் துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நாட் களையொட்டி கேக் விற்பனை அதிகமாக இருக்கும். கேக் தயாரிப்பின் மூலப் பொரு ளாக முட்டை உள்ளதால், இதன் காரண மாகவும் முட்டை விலையில் தொடர்ந்து உயர்வு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்போது கோழிகளுக்கான தீவனம் முட்டை தொழில் சார்ந்த விற்பனை ஏஜெண்டுகளுக்கான கமிசன், வண்டி வாடகை, ஆள் கூலி, மின்கட்டணம், கட்டிட வாடகை, தொடர்ந்து தொழில் நடத்துவதற் கான இதர செலவினங்கள், பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளது. இதன் கார ணமாகவும் முட்டை விலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. முட்டை விலை உயர்வு இதே நிலையில் நீடிக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. சிறிய அளவிலான மாற்றங்கள் எதிர்வரும் நாட்களில் இருக்கலாம். ஏனெனில் தற்போது ஐயப்ப பக்தர்கள் மாலையிட தொடங்கியுள்ளதால், முட்டை நுகர்வு ஓரளவுக்கு குறைய தொடங்க லாம். இவையெல்லாம் அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகே முட்டை விலையில் எத்தகைய மாற்றம் இருக்கும் என்பதை தெரிவிக்க முடியும். எனவே, தொழில் நடத்துபவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்களுக்கு ஆதர வை அளிக்க வேண்டும்” என்றார். மொத்த கொள்முதல் விற்பனை 6 ரூபாய் என இருந்தாலும், பல்வேறு படிநிலை களை தாண்டி கடைகளுக்கு முட்டை வந்து, அது பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொழுது ரூ. 6.80 முதல் ரூ. 7 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக முட்டை வாங்குவதை பொது மக்களில் கணிசமானோர் தவிர்த்து வருகின்றனர். அதேநேரத்தில் முட்டை விலை உயர்வால் கோழிப் பண்ணை உரிமையா ளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாலையோரக் கடைகள், மாலைநேர கடைகள், தினந்தோறும் செயல்படும் உணவகங்கள் என உணவுப்பொருள் சார்ந்த தயாரிப்பில் முட்டை அதிகளவு பங்களிப்பை செலுத்தி வரும் நிலையில், முட்டை விலை இதே உயர்வில் நீடிக்கும் பட்சத்தில் உணவுப் பொருட்களின் விலைகளிலும் அது எதிரொலிக்கக் கூடும் என்று கூறுகின்றனர். - எம். பிரபாகரன்
