tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

நவ. 25, 26 முதல்வர் கோவை, ஈரோடு பயணம்

சென்னை, நவ. 19 - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நவம்பர் 25, 26 தேதிகளில் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார். கோவையில் அமைக்கப் பட்டுள்ள ‘செம்மொழி பூங்கா’ மற்றும் பொல்லான் பகடை மணி மண்டபத்தை நவம்பர் 25 அன்று முதல மைச்சர் திறந்து வைக்கிறார் அதே நாளில் கோவையில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பங்கேற் கிறார். முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு  மண்டலம்!

சென்னை, நவ. 19 - குமரிக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தற்போது லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் உள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 22-இல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப் பெறும். இது மேற்கு - வட மேற்கு திசையில் நகரும் என் றும், இதனால், நவம்பர் 24 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ள தாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு ஜனவரியில் தகுதித் தேர்வு

சென்னை, நவ. 19 - தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2026 ஜன வரி 24, 25 தேதிகளில் தகுதி தேர்வு நடைபெறும் என ஆசி ரியர் தேர்வு வாரியம் அறி வித்துள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கு, நவம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை www.trb.tn.gov.in இணையதளத்தில் விண்ண ப்பிக்கலாம். 2025 செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன் னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என வாரியம் தெரிவித்துள்ளது.