ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சூர்ய பிரதாப் சிங்
உ.பி. எஸ்ஐஆர் பணியில் மொத்த கிராமத்து க்கும் ஒரு பிஎல்ஓ எப்படி படிவங்களை நிரப்ப முடியும்? டிசம்பர் 4-க்குள் முடிக்க வேண்டும் என்கிற அவசரம் என்ன? ஆனால் கிராமங்களைச் சேர்ந்த படிப்பறிவு அற்றவர்களும் முதியவர்க ளும் எப்படி இதை செய்ய முடியும்? குறைவான நேரம், திடீர் விதிகள் என மக்களுக்குதான் சுமை.
திரிணாமுல் எம்.பி சாகேத் கோகலே
அக்டோபரில் இந்திய இறக்குமதி 16.63% ஆக அதிகமாகி இருக்கிறது. ஏற்றுமதி 11.80% ஆக குறைந்திருக்கிறது. இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு குறைந்து வருகிறது. மோடி ஆட்சியின் லட்சணம் இதுதான்.
கலை செயற்பாட்டாளர் நேகா சிங்
தாழ்ப்பாளை உடைத்து, பூட்டை உடைத்து, சுவர் தாண்டி குதிப்பதற்கும் கூட உழைப்பு தேவைதான். அதற்காக திருட்டு வேலையை, கடும் உழைப்பின் பலன் என சொல்லி விட முடியாது. திருட்டை திருட்டு என்றும், திருடனை திருடன் என்றும் தான் சொல்ல முடியும். எத்தனை உழைப்பை க் கொட்டி இருந்தாலும் வாக்குத் திருடர்களை வாக்குத் திருடர்கள் என்றுதான் குறிப்பிட முடியும்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா
பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பல பாஜகவினர் 12,200-க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் விநோதம் பலருக்கும் கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது. ஞானேஷ் குமார் அவர்களே, ‘122’ என வாக்கு வித்தியாசம் தொடங்கும் மர்மம் என்ன?
