ஆப்கானிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்தார்
புதுதில்லி, நவ. 19 - ஆப்கானிஸ்தான் வர்த்த கத்துறை அமைச்சர் அல் ஹாஜ் நூருதீன் அசிசி இந்தியா வந்துள்ளார். கடந்த மாதம் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்து சென்ற குறுகிய காலத்தி லேயே மீண்டும் ஒரு ஆப்கா னிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்துள்ளார். பாகிஸ்தானு க்கும் ஆப்கானிஸ்தானுக் கும் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தால், பாகிஸ் தானிடம் இருந்து மருந்து உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய ஆப்கா னிஸ்தான் தடை விதித்தது. இந்நிலையில் இந்திய அதி காரிகளுடன் அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் நடத்தும் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
