states

img

ஹரியானாவில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை

ஹரியானாவில்  50 சதவிகிதத்துக்கும் அதிகமான  அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை

பாஜக ஆளும் ஹரியானா மாநி லத்தில் சுமார் 50 சதவிகி தத்துக்கும் அதிகமான அரசு கல்லூரிகள்  முதல்வர்கள் இல்லாம லேயே செயல்படுகின்றன.  இது அம்மாநிலத்தில் உயர்கல்வி சீர்குலைந்து வருவதை வெளிப்படுத்து வதாக அமைந்துள்ளது.  மேலும் இந்த சீர்குலைவை  அதிகப் படுத்தும் வகையில், நிரந்தர ஆசிரியர்க ளுக்கான அனுமதிக்கப்பட்ட பணியிடங்க ளில் 56 சதவிகிதம் வரை நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் இந்தக் கல்லூரிகள் பெரும்பாலும் தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் விருந்தினர் ஆசிரியர்களை மட்டுமே நம்பியுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டம்  (RTI) மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி, அம்மாநிலத்தின் 185 அரசுக் கல்லூரி களில் 85 கல்லூரிகளில் (சுமார் 46 சத விகிதம் ) நிரந்தர முதல்வர் இல்லை. அனு மதிக்கப்பட்ட 97 முதல்வர் பணியி டங்களில், 56பணியிடங்கள்  (57 சத விகிதம் ) நிரப்பப்படாமல் உள்ளன. அதே போல அனுமதிக்கப்பட்ட 2,831 பேரா சிரியர் பணியிடங்களில், வெறும் 1,394 நிரந்தர பேராசிரியர்கள் மட்டுமே உள்ள னர். அதாவது, கிட்டத்தட்ட 50 சதவிகித  ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. ஆர்டிஐ  மூலம் இந்தத் தரவுக ளைப் பெற்று வெளியிட்ட ஹரியானா தகவல் உரிமை மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், இந்த காலியிடங்கள் மாணவர்கள் சேர்க்கை யை மிக மோசமாகப் பாதித்துள்ளதாகத்  தெரிவித்துள்ளார்.   காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தாமதிப்பது மாணவர்களின் உயர்கல்வி யைச் சிதைத்து அவர்களது எதிர் காலத்தை அதல பாதாளத்தில் தள்ளும். அத்துடன் மாநிலத்தின் தரத்தை மிகக்  கடுமையாகப் பாதிக்கும்,  நிர்வாகத்தில் வெற்றிடத்தை உருவாக்கி முழு அமைப் பையும் சீர்குலைக்கும் என எச்சரிக்கப் பட்டுள்ளது.  அரசு உதவி பெறும் கல்லூரிக ளிலும் இதே நிலைதான் உள்ளது.  பேரா சிரியர்கள், தற்காலிக விரிவுரையாளர்க ளை  நியமிக்கும் செயல்முறையும் மிக மெதுவாகவே  நகர்கிறது எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.