போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழக்குவதற்கான அரசணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையில் இருந்த பணப்பலன்களை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.860 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
2024 மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணிக்காலத்தில் மரணமடைந்த பணியாளர்களின் குடும்பத்தாருக்கும் இந்த பணப்பலன்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான நடைமுறைகளை விரைவில் மேற்கொள்ள போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
