tamilnadu

img

சிதம்பரம் இணைப்புச் சாலையிலமழைநீர் வடிகால் வசதி செய்திடுக குடியிருப்போர் நலச்சங்கம் கோரிக்கை

சிதம்பரம் இணைப்புச் சாலையிலமழைநீர் வடிகால் வசதி செய்திடுக குடியிருப்போர் நலச்சங்கம் கோரிக்கை

சிதம்பரம், நவ.24- சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு இணைப்புச் சாலை அமைக்கும்போது, தில்லையம்மன் வாய்க்கால் கரையில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரில் மழைநீர் வடிய உரிய வசதிகள் ஏற்படுத்தப்படாததால், சுற்றுவட்டாரக் குடியிருப்பு களில் மழைநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று குடியிருப் போர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிதம்பரம் நகரத்திற்கு ட்பட்ட சோழன் பேருந்து பணிமனையில் இருந்து சிதம்பரம் பேருந்து நிலை யம் வரை சுமார் 1.5 கி.மீ தூரத்திற்குத் தில்லை யம்மன் ஓடை வாய்க்கால் கரையில் ரூ.36 கோடியில் இணைப்புச் சாலை அமைக்கும் பணி நடை பெறுகிறது. இதற்காகப் பொதுப்பணித் துறை வாய்க்காலில் தடுப்புச் சுவர் அமைத்தது. இந்தத் தடுப்புச் சுவரைச் சுற்றி யுள்ள மீனவர் காலனி, சுவாதி நகர், திடீர்குப்பம், தில்லையம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதி உள்ளிட்ட குடியிருப்புகளில் பெய்யும் மழைநீர் வாய்க்காலில் வடிய தடுப்புச் சுவர் அமைக்கும்போது வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை. இதுகுறித்துச் சிதம்பரம் குடியிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகி கலிய மூர்த்தி உள்ளிட்டோர் ஒரு மாதத்திற்கு முன்பே பொதுப்பணித் துறை அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டனர். அதிகாரி கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வார மாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு களில் அதிகளவு தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தக் குறைபாட்டை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதையறிந்த பொதுப்பணித் துறையினர், மழைநீர் விரைவாக வடிய நடவடிக்கை எடுப்பதாக மீண்டும் உறுதி அளித்   துள்ளனர்.