tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சுமை ஏற்படுத்தும் உடுமலை மின்வாரிய அறிவிப்பு

உடுமலை, நவ.24-  உடுமலை மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட   சில பகு திகளில் மக்கள் கடந்த முறை செலுத்திய மின் கட்டணத்தை  இந்த மாதம் செலுத்த வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டுள் ளது. நான்கு மாதங்கள் மின் கணக்கீடு செய்யாமல், வரும்  மாதம் கணக்கீடு செய்யும் போது மின் உபயோகம் அதிகமாக  வரும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். உடுமலை கோட்ட மின் வாரியத்தின் குடிமங்கலம் பிரிவு  அலுவலகத்திற்குட்பட்ட மூன்று கிராமங்களில் வசிக்கும்  மக்கள் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக மின்வாரியம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 002 – முத்துசமுத்தி ரம், 003– பத்திரகாளிமுதூர் மற்றும் 008– வெள்ளியம்பாளை யம் பகிர்மானத்தில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இம்மாத மின் கட்டணம் செலுத்த கடந்த செப்டம்பர் மாதம்  செலுத்திய மின்கட்டணத்தை இந்த மாதமும் செலுத்தும்படி  தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் உடுமலை மின்வா ரிய அலுவலகத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மக்கள்  கடந்த முறை செலுத்திய மின் கட்டணத்தை இந்த மாதம்  செலுத்த வேண்டும் என்று  அறிவித்து வருகிறது. மின் வாரிய  ஊழியர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தியது தான் இந்த அறிவிப்புக்கு காரணம் என தெரிய வருகிறது. இது போன்ற தவறு செய்த மின் வாரிய அலுவலர்களால் பொது  மக்களுக்கு சுமை ஏற்படுகிறது. தொடர்ந்து நான்கு மாதங்கள்  மின் கணக்கீடு செய்யாமல், வரும் மாதம் கணக்கீடு செய்யும்  போது மின் உபயோகம் அதிகமாக வரும். இதனால் மின் கட்ட ணம் பல மடங்கு அதிகரிக்கும். தமிழக அரசு வீடுகளுக்கு தரும்  இலவச மின்சார திட்டமும் கிடைக்காமல் போகும் நிலை ஏற் பட்டு உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாநில அளவிலான கலைத்திருவிழா

திருப்பூர், நவ.24- பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களிடையே கலை திறனை மேம்படுத்தும் வகையில்  கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. திருப் பூர் மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளி மற்றும் வட்டார அள விலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் 1,60,740 மாண வர்கள் பங்கெடுத்தனர். வட்டார அளவிலான போட்டிகளும் நிறைவு பெற்று 3,275 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட் டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான மாவட்ட அள விலான கலைத்திருவிழா போட்டிகள் கடந்த 5 ஆம் தேதி முதல்  7 ஆம் தேதி வரை ஜெய்வாபாய் மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி  பள்ளிகளில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற  போட்டிகளில் மாநில போட்டிக்கு மாணவர்கள் 114 பேர், மாண விகள் 332 பேர் என 446 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இதில்  துவக்கப்பள்ளி பிரிவில் 68 பேர், 6 முதல் 8 ஆம் வகுப்பு பிரி வில் 63 பேர்,  9 மற்றும் 10 ஆம் வகுப்பு பிரிவில் 159 பேர், மேல்நி லைப்பள்ளி பிரிவில் 156 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் செவ்வாயன்று கரூரில் துவங்குகிறது. மாநில அள வில் வெற்றி பெறும் ஒரு மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு  அரசின் கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் வழங்கப் பட உள்ளது.

விபத்து; ஒருவர் பலி

திருப்பூர், நவ.24- திருப்பூர் நல்லூர் காவல் நிலைய எல்லைகுட்பட்ட நல்லிக்கவுண்டன் நகர் பகு தியை சேர்ந்தவர் நசீர் அக மது (60). இவர் அதே பகுதி யில் மளிகை கடை வைத்து  நடத்தி வருகிறார். இந்த  நிலையில் திங்களன்று அதி காலை கடைக்கு காய்கறி மற் றும் பொருள்கள் வாங்குவ தற்காக தனது மோட்டார்  சைக்கிளில் தென்னம்பாளை யம் மார்க்கெட்டிற்கு சென் றுள்ளார்.  நல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாக னம் ஒன்று அவரது மோட்டார்  சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில், நசீர் அகமது சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் கிடைத்ததும் நல் லூர் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரத பரிசோத னைக்காக திருப்பூர் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு  அனுப்பி வைத் தனர்.  மேலும் விபத்து ஏற்ப டுத்திவிட்டு  நிற்காமல் சென்ற  வாகனம் குறித்தும் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.