மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: திருப்பூரில் 470.40 மில்லி மீட்டர் மழைப்பதிவு
திருப்பூர், நவ.24- திருப்பூரில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சுமார் 470.40 மில்லி மீட்டர் மழைப்ப திவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிக ளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உரு வாகி உள்ளதால், தமிழகத்தின் பல் வேறு பகுதிகளிலும் கடந்த சனிக்கி ழமை முதல் மழை பெய்து வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்களன்று காலை வரை திருப்பூர் வடக்கு பகுதி யில் 26 மி.மீ, குமார் நகர் பகுதியில் 30 மி.மீ, பல்லடம் சாலையில் 27 மி.மீ, மழை பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி தாலுகாவில் 13மி.மீ, ஊத்துக் குளி தாலுகாவில் 19 மி.மீ, பல்லடத்தில் 14 மி.மீ, தாராபுரத்தில் 16 மி.மீ, மூலனூ ரில் 24 மி.மீ, காங்கேயம் தாலுகாவில் 28 மி.மீ, வெள்ளகோவிலில் 31 மி.மீ, உடும லைப்பேட்டையில் 22 மி.மீ, அமராவதி அணை பகுதியில் 42 மி.மீ, மடத்துக் குளத்தில் 16 மி.மீ, என மாவட்டம் முழு வதும் 470.40 மி.மீ, மழை பதிவு சராசரி யாக 23.52 மி.மீ, மழை பதிவாகி இருப் பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 அடி உயர்ந்த நீர்மட்டம் அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகு திகளில் பருவ மழை தொடங்கி உள்ள தால், அணையின் நீர்மட்டம் இரண்டு நாட்களில் 4 அடி என்ற அளவில் கணிச மாக உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 70.18 அடி யாக உள்ளது மேலும் அணைக்கு நீர்வ ரத்து வினாடிக்கு 2019 கன அடியாக உள் ளது. மாடுகள் வரத்து குறைவு: திருப்பூர் தாராபுரம் சாலை அமராவ திபாளையம் பகுதியில் நடைபெறும் மாட்டுச் சந்தை பிரசித்தி பெற்ற மாட் டுச்சந்தையாக இருந்து வருகிறது. இந்த மாட்டுச்சந்தையில் திருப்பூர் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவதும் மாடுகளை இங்கி ருந்து வாங்கி செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது கோவை, ஈரோடு மாவட் டங்களிலும் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு இருந்து வந்தால் திங்க ளன்று நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்திருந்தன. 653 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், கன்று ரூ.2,500 முதல் ரூ.3,000 வரையி லும், காளை ரூ.30,000 முதல் ரூ.35,000 வரையிலும், எருமை ரூ.28,000 முதல் ரூ.32,000 வரையிலும், மாடு ரூ.25,000 முதல் ரூ.29,000 வரையிலும் விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்த னர்.