கடனை வசூலிக்க துரத்தி சென்று அடாவடி ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர்கள் மீது புகார்
சேலம், நவ.24- கடனை வசூலிக்க சங்ககிரி சுங் கச்சாவடி அருகே பட்டப்பகலில் ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர்கள் 20க்கு மேற்பட்டோர் ஈச்சர் லாரியில் வந்த குடும்பத்தினரை விரட்டி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் செந்தில் குமார் (44). இவருக்கு காந்திமதி (39) என்ற மனைவியும், மூன்று மகள்களும், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு ஹெச் டிஎஃப்சி வங்கியில் தவணை முறை யில் ஈச்சர் லாரி வாங்கி ஓட்டி வரு கிறார். இவர் வாங்கிய ஈச்சர் வாக னத்தின் கடன் தவணையை கடந்த ஐந்து மாதங்களாக கட்டவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் செந்தில்குமார் தனது மனைவி மகனுடன் ஞாயி றன்று காலை ஆத்தூரில் இருந்து ஈச்சர் வாகனத்தில் கோபிசெட்டி பாளையம் நோக்கி சென்று கொண் டிருந்துள்ளார். அப்போது சேலம் கொண்ட லாம்பட்டி பைபாஸ் என்ற இடத்தில் ஒருவர் ஈச்சர் வாகனத்தை நிறுத்தி செந்தில்குமாரை கீழே இறங்கும் படி கூறியுள்ளனர். அப்போது யார் நீங்கள் என்று செந்தில்குமார் கேட்ட பொழுது நாங்கள் ஹெச்டிஎஃப்சி வங்கியில் இருந்து வருகிறோம். வாகனத் தின் தவணை செலுத்தாததால் வாக னத்தை விட்டுச் செல்லும்படி மிரட்டி உள்ளனர். அதனையடுத்து செந் தில்குமார் தனது மனைவி மகனு டன் வாகனத்தை விட்டு கீழே இறங் காமல் அவர் தொடர்ந்து ஈச்சர் வாக னத்தில் சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். அதனையடுத்து வைகுந்தம் சுங்கச்சாவடியில் இருபதுக்கு மேற் பட்டோர் ஈச்சர் வாகனத்தை சுற்றி வ ளைத்து செந்தில்குமாரை மிரட்டி உள்ளனர். உடனே செந்தில்குமார் காவல் துறைக்கு தகவல் தெரி வித்துள்ளார். தகவலின் பெயரில் சங்ககிரி உதவி ஆய்வாளர் அருண் குமார் மற்றும் காவலர்கள் வைகுந் தம் சுங்கச்சாவடிக்கு வந்து விசார ணை மேற்கொண்டனர். இருப்பி னும் அந்த கும்பல் செந்தில்குமா ரை விட்டு செல்லாமல் வாக்குவா தத்தில் ஈடுபட்டு வந்தனர். தகவல் குறித்து செய்தியாளர் கள் செய்தி சேகரிக்க சென்ற போது வசூல் கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர். அதனையடுத்து செந்தில் குமார் தனது மனைவி குழந்தை யுடன் சங்ககிரி காவல் நிலையத் திற்கு ஈச்சர் லாரியுடன் சென்று தங் களை அடையாளம் தெரியாத கும் பல் துரத்தி வருவதாக புகார் அளித் துள்ளார். புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து விசா ரித்து வருகின்றனர். அதிகாரிகள் இதுபோன்ற செய லில் ஈடுபட மாட்டார்கள் எனவே அந்த கும்பல் யார் என்று தெரிய வில்லை போலீசாரிடம் புகார் அளித் துள்ளோம் போலீசார் விசாரித்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பட்டப்பகலில் சேலம் கொண்ட லாம்பட்டி பைபாஸிலிருந்து சங்க கிரி வைகுந்தம் சுங்கச்சாவடி வரை ஈச்சர் வாகனத்தை 20க்கும் மேற் பட்டோர் துரத்தி வந்து தம்பதிய ரை மிரட்டிய சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.