இடர்பாடுகளை களைந்திட முன்னேற்பாடுகள் தயார்! மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்
நாமக்கல், நவ.24- மழைக்காலங்களில் மின் வாரியத்தில் ஏற்படும் இடர்பாடு களை களைந்திட அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும், பாது காப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழ் நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாடு மின்வாரிய மேலாண் இயக்குனரும், தலைவ ருமான டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், நாமக்கல் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மற்றும் துணை மின் நிலையங்களில் ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மழைக்காலங்களில் மின் வாரியத்தில் ஏற்படும் இடர்பாடு களை களைந்திட அனைத்து முன்னேற்பாடுகளும், பாது காப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. நடப்பாண்டு கோடை காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளித்தது போல் வரும் ஆண்டிலும் கோடை காலத்தில் மின் பற் றாக்குறை ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய் யப்பட்டுள்ளது. மேலும் வரும் கோடை காலத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. நாமக்கல்லை பொறுத்தவரை, அதிகளவில் எலக்ட்ரா னிக் வாகனங்கள் வரப்போகிறது. வருங்கால தேவையை கருத்தில் கொண்டு, பெட்ரோல் பங்க்குகள், போக்குவரத்து கழக பணிமனைகள், தனியார் இடங்களில், இ.வி., சார்ஜிங் பாயிண்ட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது என்றார். பேட்டியின் போது மேற்பார்வை பொறியாளர் (நாமக் கல் மின்பகிர்மான வட்டம்) சபாநாயகம், செயற்பொறி யாளர் சுந்தர்ராஜன், இணை இயக்குநர் ஆனந்த் பாபு ஆகி யோர் உடன் இருந்தனர்.
கழிவு நீரை ஆவியாக்குவதால் மாசுபாடு உண்ணாவிரதம் அறிவிப்பு
ஈரோடு, நவ.24- பவானி அருகே தனியார் சர்க்கரை ஆலையின் கழிவு நீரை காய்ச்சி ஆவியாக்குவதால் மாசுபாடு ஏற்படுவதைக் கண் டித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பூலப்பாளையம், சின்னபுலியூர், பெரியபுலியூர், வைரமங்கலம் ஆகிய கிராமங் களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அம்மனுவில், சின்ன புலியூரில் தனியார் சர்க்கரை ஆலை (பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை) வடிப்பக பிரிவு எரிசாராய ஆலை செயல் படுகிறது. அங்கு தினமும், 6 லட்சம் முதல், 9 லட்சம் லிட்டர் வரை கழிவு நீரை காய்ச்சி, ஆவியாக்குகின்றனர். இதனால் காற்று, நீர் மாசுபடுகிறது. கழிவு நீரை ஆவியாக்கும்போது வெளியேறும் புகை நாற்றம் வீசுகிறது. மூச்சு திணறல், நுரை யீரல் பிரச்னை ஏற்படுகிறது. அதன் சாம்பல் வீடுகள், தண்ணீ ரில் படிகிறது. இதுபற்றி உரிய துறையினர் விசாரித்து, ஆய் வுக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுத்து, இச்செயல்பாட்டை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இதனை வலியுறுத்தி வரும் டிச.21 இல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.
அணைகள் நிலவரம்
பவானிசாகர் அணை நீர்மட்டம்:102.43/105அடி நீர்வரத்து:2816 கனஅடி நீர்திறப்பு:200 கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:145/160 அடி நீர்வரத்து:317கனஅடி நீர்திறப்பு:956.32கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:70.10/72 அடி நீர்வரத்து:1277கனஅடி நீர்திறப்பு:910கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:115/120அடி நீர்வரத்து:424கனஅடி நீர்திறப்பு:266கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:51.16/60அடி நீர்வரத்து:1074கனஅடி நீர்திறப்பு:466கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:70.34/90அடி நீர்வரத்து:1589கனஅடி நீர்திறப்பு:200கனஅடி
ஏற்காடு: டிரக்கிங் ஆன்லைன் புக்கிங் நிறுத்தம்
சேலம், நவ.24- ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் டிரக் கிங் செய்ய ஆன்லைன் புக்கிங் நிறுத்தப்பட் டுள்ளதாக வனத்துறையினர் அறிவித் துள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காடு தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் மற்ற சுற்று லாத் தலங்களில் ஆன்லைன் பிரச்சினை இருப்பதால் அதிக எண்ணிக்கையில் ஏற்காடு பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. சுற்று லாப் பயணிகளின் வசதிக்கேற்ப ஏற்காடு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம் படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும் பப்பட்டி-குண்டூர், கொண்டப்பநாயக் கன்பட்டி- குண்டூர் ஆகிய 2 டிரக்கிங் ரூட்க ளுக்கான ஆன்லைன் புக்கிங் நிறுத் தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் வனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்று லாப் பயணிகள் முறையாக டிரக்கிங் செல்ல உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஏற்பாடுகளை செய்து வருகின்ற னர். மிக விரைவில் இப்பாதைகளில் சுற்று லாப் பயணிகள் டிரக்கிங் செல்ல ஆன்லைன் புக்கிங் மேற்கொள்ள நடவடிக்கை எடுக் கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.