tamilnadu

img

கனமழையால் மலைவாழ் மக்கள் வீடுகள் சேதம்

கனமழையால் மலைவாழ் மக்கள் வீடுகள் சேதம்

உடுமலை,நவ.24- உடுமலைப்பேட்டையில் கடந்த  நான்கு நாட்களாக பெய்த கன மழை யால் மலை அடிவாரத்தில் வசிக்கும்  மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.   உடுமலைப்பேட்டை தாலுகாவிற் குட்பட்ட மலை அடிவார பகுதியான திருமூர்த்திமலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்புள்ளது. இதில் சுமார் 110 குடும்பங்களில், 500 க்கும்  மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து  வருகின்றனர். இந்நிலையில் இப்பகு தியில் கடந்த சில நாட்களாக பெய்த  மழையில் 3 வீடுகள் இடந்துள்ளன்.  மேலும், பல வீடுகள் ஆபத்தான நிலை யில் உள்ளன. குடியிருப்பு பகுதியில்  மழை நீர் வெளியே செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து மலைவாழ் மக்கள் சங் கத்தினர் தெரிவிக்கையில், உடுமலை தாலுகாவிற்கு உட்பட்ட மலைவாழ் மக் கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளும் கடுமையாக சேத மைந்துள்ளன. அவற்றை சரி  செய்து,  அரசு அனைத்து மக்களுக்கும் கான்கி ரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.