tamilnadu

img

இருளர் மக்களுக்கு மனைப் பட்டா வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு

இருளர் மக்களுக்கு மனைப் பட்டா  வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு

கடலூர், நவ. 24-  விருத்தாசலம் வட்டத்தில் உள்ள ஊத்தங்கால், எடகுப்பம், சாத்தமங்கலம், சின்னவடவாடி, சாவடிகுப்பம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்கள் பட்டா கோரி மனு அளித்தனர். தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு இலவச மனைப் பட்டா கேட்டும், குடி மனைப் பட்டா கேட்டும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், பழங்குடி மக்கள் நலச்சங்கம் மற்றும் சிபிஎம் சார்பில் விருத்தாசலம் வட்டாட்சியர் அலு வலகம் நோக்கிப் பேரணியாகச் சென்று மனு அளித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழங்குடி நல அமைப்பின் மாவட்டப் பொருளாளர் வெங்கடேசன் போராட்ட த்திற்குத் தலைமை தாங்கினார். போராட்டக்  காரர்களிடம் மனுவைப் பெற்றுக்கொண்ட விருத்தாசலம் வட்டாட்சியர் அரவிந்தன், 20 நாட்களுக்குள்ளாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்தப் போராட்டத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, பழங்குடி சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.எஸ். அசோகன், சிபிஎம் கம்மாபுரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.கலைச்செல்வன், விருத்தாசலம் ஒன்றியக் குழு உறுப்பினர் சேகர் ஆகியோர் விளக்க உரையாற்றினர். இவர்களுடன், சாவடிகுப்பத்தைச் சேர்ந்த சண்முகம், ஊத்தங்காலைச் சேர்ந்த அம்சவள்ளி, சின்னவடவாடியைச் சேர்ந்த கொளஞ்சி, எடகுப்பத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் அஜய் உள்ளிட்ட பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.