27 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி மலக்கா ஜலசந்தி மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 27ஆம் தேதிக்குள் புயலாக வலுப்பெறும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டது
இந்நிலையில் இது மேலும் தீவிரமடைந்தாலும், புயலாக மாற வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
