tamilnadu

img

கோவையில் செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

கோவை காந்திபுரத்தில் 208 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கர் பரப்பளவில் முதல்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பூங்காவை பார்வையிட்டார்.
கோவையில் 2010-ஆம் ஆண்டு உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் போது, காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி அறிவித்தார். ஆட்சி மாற்றத்திற்கு பின்பு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவை வந்த முதலமைச்சர் மு.கஸ்டாலின் செம்மொழிப் பூங்கா பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைத்திட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டது. பூங்காவில் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் செம்மொழிப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இப்பூங்கா வளாகத்தில் வைக்கபட்டுள்ள கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளையும், இப்பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம். நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கபட்டுள்ளன.