உயிரை உருக்கும் மார்கழிப் பனியில், உதிரத்தை வியர்வையாக சிந்தும் உழைப் பாளி மக்களிடம் உண்டியல் ஏந்திச் சென்ற போது, அவர்கள் வாரி வழங்கிய அன்பின் வெளிப்பாடு விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கிறது. முப்பது ஆண்டுகால மக்கள் பயணம் 1995-இல் மாவட்ட அள வில் முறையாக திட்டமிடப் பட்டு துவங்கிய இந்த மக்கள் இயக்கம், முப்பது ஆண்டுகளாக தொய்வின்றி தொடர்கிறது. கடந்த டிசம்பர் 29 முதல் தொடங்கிய இந்த ஆண்டின் நிதி திரட்டும் இயக்கம், 17 இடைக்கமிட்டிகளின் 352 கிளைகளில் இருந்து 1,063 குழுக்கள் மூலம் வெறும் 12 நாட்களில் ரூ.19,89,924 திரட்டியுள்ளது. ஒரு லட்சம் குடும்பங்களை ஏற்க னவே சந்தித்துள்ள இவ்வியக் கம், ஜனவரி 26 வரை தொடர்ந்து மேலும் ஒரு லட்சம் குடும்பங்களை சந்திக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
நெசவாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்
திருவில்லிபுத்தூரில் கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் இல்லை, வேலை இல்லை, கூலி உயர்வு இல்லை என்ற நிலையில், கூட்டுறவு சங்கங்கள் முன் முற்றுகை போ ராட்டம் நடத்தி நூலும் வேலையும் பெற்றுத் தந்தது மார்க்சிஸ்ட் கட்சி. இராஜபாளையம் மேற்கு ஒன்றியம், தளவாய்புரம் கிழக்கு ஒன்றியம், சத்திரப்பட்டி பகுதி களில் விசைத்தறி தொழிலாளர் களின் கூலி உயர்வு, போனஸ் உயர்வுக்கான தொடர் போராட் டங்கள் வெற்றி கண்டன. இராஜ பாளையம் நகரில் அநியாய வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் கட்டண உயர்வுக்கு எதிரான போ ராட்டங்களால் வரிகள் குறைக்கப் பட்டன. பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாவலர் வானத்தில் வர்ணஜாலங்களு டன் ஜொலிக்கும் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் சிவகாசி பகுதி யில், வெடித்துச் சிதறுவது பட்டாசுகள் மட்டுமல்ல, தொழி லாளர்களின் உடல்களும்தான். விபத்துகளால் உயிரிழந்த தொழி லாளர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு, கூடுதல் நிவாரணம், அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுகளை முழுமை யாக ஏற்கச் செய்தது செங்கொடி இயக்கம்.
நகர்ப்புற மக்களின் குரல்
விருதுநகர், அருப்புக் கோட்டை, சாத்தூர் ஆகிய நகரங்க ளில் நகர மன்ற உறுப்பினர்கள் மூலம் அப்பகுதி மக்களின் அடிப் படை பிரச்சனைகளுக்கு தொடர்ச்சியான தலையீடுகளும் போராட்டங்களும் நடத்தி நிவார ணங்கள் பெற்றுத் தரப்பட்டன. விவசாயிகளின் வலிமையான துணை கிராமப்புற விவசாயி களுக்கான பயிர்க் கடன், பயிர் காப்பீடு, பாசன வசதி, விளை பொருட்கள் கொள்முதல், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கான இழப்பீடு என அனைத்திற்கும் குரல் கொடுத்து வருகிறது. திருவில்லிபுத்தூர் ஒன்றியம் அச்சந்தவிழ்த்தான், அருப்புக்கோட்டை ஒன்றியம் புலியூரான், சிவகாசி ஒன்றியம் பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயத்தை அழிக்கும் கல் குவாரி களை எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தியது.
சமூக நீதியின் காவலர்
நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை மற்றும் கூலி கேட்டு ஊராட்சிகளிலும், ஒன்றிய அலுவல கங்களிலும் எண்ணற்ற போராட்டங் கள் நடத்தப்பட்டன. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை, தலித் மக்களின் உரிமை மறுப்பு ஆகியவற்றை அறிந்ததும் களத்திற்கு செல்லும் முதல் இயக்க மாக மார்க்சிஸ்ட் கட்சி திகழ்கிறது. மக்களின் அன்பின் வெளிப்பாடு விருதுநகர் வடக்கு ஒன்றியம் சூலக்கரையில் தோழர்கள் எம். அசோகன், ஜெ.ஜே.சீனி வாசன், எம்.தில்லைநாய கம், எம்.சிவராமன் ஆகி யோரின் குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் கட்சி நிதிக்காக உண்டியல் மூலம் ஓராண்டு சேமித்த ரூ.13,335-ஐ மாவட்டச் செயலாளர் ஏ.குருசாமியிடம் வழங்கினர்.
மக்களோடு ஒன்றிய செங்கொடி
வீடு வீடாக மக்களைச் சந்திப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை நிலைகளை அறிய வும், வெகுமக்கள் வாழும் பகுதி களின் அடிப்படை பிரச்சனை களை தெரிந்து கொள்ளவும், அவர்களின் அரசியல் மனோபா வங்களை புரிந்து கொள்ளவும் முடிகிறது. மார்க்சிஸ்ட் கட்சியை மக்கள் அறிந்தே வைத்திருக் கிறார்கள் என்பதற்கு இந்த மகத் தான மக்கள் இயக்கமே சாட்சி. மேலும் இந்த இயக்கத்தை வலுப் படுத்தி, மக்களிடம் சென்று, மனித மனங்களை வென்றெடுப்போம்!