இந்தியாவில் வாழும் மக்கள் தங்களது பல்வேறு அடையாளங்களான சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து ஒரே இந்திய தேசிய உணர்வை உருவாக்கினர். இந்த ஒற்றுமை இன்று ஆபத்தில் உள்ளது. ஊடகங்கள் மக்களுக்கும் நிர்வாக அதிகாரத்துக்கும் இடையே இணைப்பாக செயல்பட வேண்டிய நான்காவது தூண் என்று ஜனநாயகத்தில் கருதப்படுகிறது. இந்த செயல்பாட்டில் ஊடகங்களின் பணி வெறும் தகவல் பரிமாற்றம் மட்டுமல்ல, மாறாக நமது அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநாட்டுவதிலும் இந்திய தேசிய உணர்வை வலுப்படுத்துவதிலும் மக்களை ஒன்றிணைப்பதாகவும் இருக்க வேண்டும்.